ஒக்ஸ்போர்ட் ஆங்கில அகராதியில் 1000 புதிய சொற்கள் இணைப்பு

oxford dictionaryலண்டன்: உலகப்புகழ்பெற்ற ஒக்ஸ்போர்ட் ஆங்கில அகராதியில் மேலும் புதியதாக 1000 சொற்கள் சேர்க்கப்பட்டுள்ளன. 150 வருடங்கள் பழமை வாய்ந்த உலகப் புகழ்பெற்ற ஒக்ஸ்போர்ட் அகராதி நிறுவனம் ஆங்கில மொழியில் 6 இலட்சம் வார்த்தைகளை வைத்துள்ளது. மூன்று மாதங்களுக்கு ஒரு முறை புதிதாக அறிமுகமாகும் சொற்களை இணைத்துக் கொள்வது வழக்கம்.

அதன்படி நடப்புக் காலாண்டுக்கான சொற்கள் தர மேம்பாட்டில் 1000 புதிய வார்த்தைகளையும், சொற்றொடர்களையும் இணைத்துள்ளது. இந்த அகராதி ஆங்கில வெகுஜன மக்களின் கலாசாரத்தைச் சார்ந்த வார்த்தைகளையும், சில விரிவாக்கங்களையும் இணைத்துள்ளது.

உதாரணமாக ‘டக் பேஸ்’ என்ற வார்த்தை புகைப்படம் எடுக்கும் போது ஒரு நபரின் உதடுகள் வெளியே நீட்டிக்கொண்டிருப்பதைக் குறிப்பிடப் பயன்படுத்தும் வார்த்தையாகும். வளமான அவுஸ்திரேலிய ஆங்கில வட்டார வழக்குகள் வரை, இந்த அகராதியின் ஆதிக்கம் நீண்டுள்ளது. தற்போது மக்களிடையே சாதரணமாக புழங்கும் சொற்களும் இணைக்கப்பட்டுள்ளது இதன் தனிச்சிறப்பு.

Published by

Leave a comment