Category: Your Kattankudy
-
தேர்தல் காரியாலயம் காத்தான்குடியில் திறந்து வைப்பு
பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: 2015 ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி வேட்பாளர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை ஆதரிப்பதற்கான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பிரதேச தேர்தல் காரியாலயம் ஒன்று 14-12-2014 ஞாயிற்றுக்கிழமை காத்தான்குடியில் திறந்து வைக்கப்பட்டது.
-
தேசிய இளைஞர் கழக சம்மேளனத்தின் செயலாளர் சமன்குமார ரணவீர மரணம்!
எம்.ரீ.எம்.பாரிஸ் மாத்தறை: இன, மத வேறுபாடுகளுக்கு அப்பால் பெரும்பாண்மையினம் என்பதை தாண்டி எமக்காக, தமிழ் பேசும் மக்களுக்காக தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தில் இலங்கை இளைஞா்கள் என்ற ஒரோ என்னத்துடன் செயற்பட்ட தேசிய இளைஞர் கழக சம்மேளனத்தின் செயலாளர் சமன்குமார ரணவீர தீடீர் என்று ஏற்பட்ட மாரடைப்பினால் மரணமடைத்தார்.
-
இஸ்லாத்தில் பெண்ணின் விருப்பம் பெற்று திருமணம் செய்யப்பட வேண்டும்: மனித உரிமைகள் ஆணைக்குழு இணைப்பாளர் அப்துல் அஸீஸ்
அப்துல் அஸீஸ் புதுக்குடியிருப்பு: இலங்கை முஸ்லிம்களின் குடும்பச் சட்டம் படிப்படியாக பொதுச் சட்டத்தின் செல்வாக்கைவிட, இஸ்லாமிய சட்ட விதிகளின் செல்வாக்கிற்கு உட்பட்டு வருகிறது. ஆயினும் எம் நாட்டில் அதிகமானவர்கள் பொதுச் சட்டத்தினாலும், குறிப்பிட்ட எண்ணிக்கையிலான இலங்கைப் பிரஜைகள் தனியார் சட்டங்களினாலும், ஆளப்படுகின்றனர்.
-
ரிசாத் பதியுதீன் அரச உடமைகளை பயன்படுத்தவில்லை : வடமாகாண சபை உறுப்பினர் மறுக்கிறார்
இர்ஷாத் றஹ்மத்துல்லா மன்னார்: ‘அமைச்சர் றிசாத் பதியுதீன் அரச உடைமைகளை தேர்தலுக்கு பயன்படுத்துகின்றார் – NFGG முறைப்பாடு’ என்னும் தலைப்பில் இணையத்தளங்களில் வெளியான செய்தி தொடர்பில் வடமாகாண சபை உறுப்பினர் றிப்கான் பதியுதீன் அதிருப்பதியிருப்தியினை வெளியிட்டுள்ளதுடன், இது குறித்து விளக்கமொன்றினையும் அளித்துள்ளார்.
-
காத்தான்குடி நகரசபையின் கவனயீனம்..!
முஹம்மது பஹத் காத்தான்குடி: ஆபத்தை எதிர்நோக்கும் அல்-அமீன் வீதி மக்கள். சிதைவடைந்து காணப்படும் வடிகான் மூடிகள். இதுவரை கண்டு கெள்ளாத நகரசபை.
-
பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு சலுகை அடிப்படையில் மோட்டார் சைக்கிள் வழங்கி வைப்பு
– பழுலுல்லாஹ் பர்ஹான் மட்டக்களப்பு: ‘உங்களுக்கு வளமான எதிர்காலம்’ எனும் தொனிப்பொருளில் மஹிந்த சிந்தனை தொலைநோக்கு வேலைத் திட்டத்தின் கீழ் அரச வெளிக்கள உத்தியோகத்தர்களுக்கு சலுகை அடிப்படையில் வரி இல்லாமல் 50000 ரூபாய் பெறுமதிக்கு மோட்டார் சைக்கிள் வழங்கப்படும் என கடந்த வரவு செலவு திட்டத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்திருந்தார்.
-
அமைச்சர் றிஷாட் அரச உடைமைகளை தேர்தலுக்குப் பயன்படுத்துகிறார்- முறைப்பாடு
– ஊடகப்பிரிவு, நல்லாட்சிக்கான தேசிய முன்னணி யாழ்ப்பாணம்: 2013ம் ஆண்டு பெரும்போக விவசாயத்தின்போது கடுமையான வரட்சி நிலவியதன் காரணமாக வட மாகாணத்தில் விவசாயிகள் பலர் பாதிக்கப்பட்டனர். இதனால் இப்பிரதேசத்திற்கு நஷ்ட ஈடுகள் வழங்கப்பட வேண்டும் என்று பாராளுமன்ற உறுப்பினர் ஹுனைஸ் பாறூக் அவர்கள் விஷேட நிதி ஒதுக்கீடு ஒன்றினை அரசாங்கத்திடம் கோரி இருந்தார். அத்துடன் இதே விடயத்தை வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த ஏனைய பாராளுமன்ற உறுப்பினர்களும் கோரியிருந்தனர்.
-
திறந்து வைக்கும் நிகழ்வு
– ஹாசிப் யாஸீன் கல்முனை: பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸின் முயற்சியினால் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் மூலம் கல்முனைக்குடி சாஹிபு வீதியில் நிர்மாணிக்கப்பட்ட ஆயுர்வேத வைத்தியசாலைக்கான பல்தேவைக் கட்டிடம் மற்றும் கல்முனைக்குடி முகைதீன் ஜூம்ஆப் பள்ளிவாசல் முன்பாக நிர்மாணிக்கப்பட்ட கடைத் தொகுதிகள் என்பன திறந்து வைக்கும் நிகழ்வு நேற்று (13) இடம்பெற்றது.
-
“ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவளிப்பது தொடர்பில் இன்னும் ஒருவார காலத்தின் பின்னரே முடிவு”
கொழும்பு: ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவளிப்பது தொடர்பில் இன்னும் ஒருவார காலத்தின் பின்னரே முடிவு செய்யவுள்ளதாக முஸ்லிம் காங்கிரஸின் உயர் பீடக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளதாக கட்சித் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார் தேர்தலில் யாரை ஆதரிப்பது என்ற இறுதி முடிவு எடுக்கும் அதிகாரம் முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீமுக்கு வழங்கப்பட்டுள்ளது.
-
பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவை போல் மற்றும் ஒரு சிறிசேன ஜனாதிபதி தேர்தலில் போட்டி!
கொழும்பு: பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவை போன்ற உருவத்தைக்கொண்ட ரட்நாயக்க ஆராச்சியலாகே சிறிசேன இந்த தடவை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுகிறார். அவர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் சொந்த ஊரான மெதமுனவில் வசிக்கிறார். மஹிந்த ராஜபக்சவின் வீட்டில் இருந்து குறுகிய தூரத்திலேயே சிறிசேனவின் வீடும் அமைந்துள்ளது. மைத்திரிபால சிறிசேனவைப்போன்றே சிறிசேனவும் கிராம சேவகராக இருந்துள்ளார்.
-
ஐ.எஸ். அமைப்புக்கு ஆதரவாக பிரபல ட்விட்டர் கணக்கை இயக்கி வந்த பெங்களுர் இளைஞன் கைது!
பெங்களுரு: இஸ்லாமிய அரசு அமைப்புக்கு ஆதரவாக (IS) ட்விட்டர் சமூக ஊடக தள கணக்கொன்றை நடத்தியதான சந்தேகத்தில், இந்தியாவின் பெங்களூருவில் இருந்து இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டிருக்கிறார். கைதுசெய்யப்பட்டுள்ளது மெஹ்தி மஸ்ரூர் பிஸ்வாஸ் என்ற 24 வயது இளைஞர் என பொலிசார் கூறுகின்றனர்.
-
கர்பாலாவில் 1.7 கோடி ஷியாக்கள் ஒன்று கூடினர்
கர்பலா: உலக ஷியா முஸ்லிம்கள் வருடாந்தம் கூடும் நிகழ்வு ஈராக்கிய நகரான கர்பலா ஏற்பாடு செய்துள்ளது. இஸ்லாமிய அரசின் (IS) சுன்னி தீவிரவாத தாக்குதல் அச்சுறுத்தலுக்கு மத்தியிலும் இந்த ஏற்பாடுகள் நடந்துள்ளன. இந்த அர்பாயீன் நிகழ்வுக்காக அந்த நகருக்குள் 1.7 கோடி ஷியா முஸ்லிம்கள் குவிந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.