திறந்து வைக்கும் நிகழ்வு

kalmunai (2)– ஹாசிப் யாஸீன்

கல்முனை: பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸின் முயற்சியினால் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் மூலம் கல்முனைக்குடி சாஹிபு வீதியில் நிர்மாணிக்கப்பட்ட ஆயுர்வேத வைத்தியசாலைக்கான பல்தேவைக் கட்டிடம் மற்றும் கல்முனைக்குடி முகைதீன் ஜூம்ஆப் பள்ளிவாசல் முன்பாக நிர்மாணிக்கப்பட்ட கடைத் தொகுதிகள் என்பன திறந்து வைக்கும் நிகழ்வு நேற்று (13) இடம்பெற்றது.

கல்முனைக்குடி முகைதீன் ஜூம்ஆப் பள்ளிவாசல் தலைவர் டாக்டர் எஸ்.எம்.ஏ.அஸீஸ் தலைமையில் இடம்பெறவுள்ள இந்நிகழ்வுக்கு திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், கல்முனைத் தொகுதி அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுத் தலைவருமான சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் பிரதம அதிதியாக கலந்து கொண்டு திறந்து வைத்தார்.

kalmunai (2)

இதில் கல்முனை மாநரக சபையின் பிரதி முதல்வர் ஏ.எல்.அப்துல் மஜீத், கல்முனை மாநரக சபை உறுப்பினர்களான ஏ.எம்.பறக்கத்துள்ளாஹ்;, எம்.எம்.முஸ்தபா, ஏ.ஏ.பசீர், எம்.ஐ.உமர் அலி, ‘லங்கா முஸ்லிம் காங்கிரஸின் கல்முனை மசூறாக் குழுத் தலைவர் அல்-ஹாஜ் யூ.எல்.ஏ.கரீம் உள்ளிட்ட அரசியல் பிரமுகர்கள், உயர் அதிகாரிகள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

kalmunai

இதனைத் தொடர்ந்து பொதுக்கூட்டமும் கல்முனைக்குடி ஜூம்ஆப் பள்ளிவாசல் முன்பாக இடம்பெற்றது. இதில் பெருந்திரளான மக்கள் கலந்து கொண்டனர்.

Published by

Leave a comment