பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவை போல் மற்றும் ஒரு சிறிசேன ஜனாதிபதி தேர்தலில் போட்டி!
கொழும்பு: பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவை போன்ற உருவத்தைக்கொண்ட ரட்நாயக்க ஆராச்சியலாகே சிறிசேன இந்த தடவை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுகிறார். அவர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் சொந்த ஊரான மெதமுனவில் வசிக்கிறார். மஹிந்த ராஜபக்சவின் வீட்டில் இருந்து குறுகிய தூரத்திலேயே சிறிசேனவின் வீடும் அமைந்துள்ளது. மைத்திரிபால சிறிசேனவைப்போன்றே சிறிசேனவும் கிராம சேவகராக இருந்துள்ளார்.
அத்துடன் சிறிசேன சுவர்ணவாஹினியில் ஒளிபரப்பப்பட்ட நகைச்சுவை நாடகம் ஒன்றில் மைத்திரிபால சிறிசேனவாக நடித்துள்ளார். இந்தநிலையில் ஜனாதிபதி வேட்புமனுத்தாக்கல் தினத்தன்று சிறிசேன தேர்தல் திணைக்களத்துக்கு வந்தபோது அனைவரும் ஆச்சரியப்பட்டனர்.
மைத்திரிபால சிறிசேனவாக ரத்நாயக்க சிரிசேன…
இந்தநிலையில் இன்று இலங்கையின் சிங்கள நாளிதழ் ஒன்று சிறிசேனவின் வீடு மஹிந்த ராஜபக்சவின் வீட்டில் இருந்து சிறிது தூரத்தில் இருக்கும் தகவலை வெளியிட்டுள்ளது. இதேவேளை தாம் ஏன் இந்ததேர்தலில் போட்டியிடுகிறார் என்பதற்கான விளக்கத்தை சிறிசேன இன்னும் வெளியிடவில்லை.அத்துடன் முன்னர் எப்போதும் அவர் அரசியலில் பங்கேற்கவும் இல்லை. எனினும் மைத்திரிபால சிறிசேனவின் வாக்குகளை ஒரளவு குறைக்கலாம் என்ற வகையில் இவர் போட்டியிட வைக்கப்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது.
Leave a comment