தேசிய இளைஞர் கழக சம்மேளனத்தின் செயலாளர் சமன்குமார ரணவீர மரணம்!

unnamedஎம்.ரீ.எம்.பாரிஸ்

மாத்தறை: இன, மத வேறுபாடுகளுக்கு அப்பால்  பெரும்பாண்மையினம் என்பதை தாண்டி எமக்காக, தமிழ் பேசும் மக்களுக்காக தேசிய  இளைஞர்  சேவைகள்  மன்றத்தில்  இலங்கை இளைஞா்கள் என்ற ஒரோ என்னத்துடன் செயற்பட்ட தேசிய இளைஞர் கழக சம்மேளனத்தின் செயலாளர் சமன்குமார ரணவீர தீடீர் என்று ஏற்பட்ட மாரடைப்பினால் மரணமடைத்தார்.

இதற்காக வேண்டி எமது ஆழ்ந்த அனுதாபங்களை அவா்களுடைய குடும்பத்தினருக்கு தெரிவிப்பதற்காக வேண்டியும் அவரின் இறுதி சடங்கு நிகழ்வில் கலந்து கொள்வதற்காக வேண்டி மட்டு பிராத்திய தேசிய இளைஞா் சேவைகள் மன்றத்தின் உதவிப்பணிப்பாளா் எம்.என்.எம். நைறூஸ் தலைமையில் நாளை 15.12.2014 திங்கட்கிழமை இளைஞா் சேவை அதிகாரிகள், மாவட்ட இளைஞா் சம்மேளன அங்கத்தவா்கள் உள்ளிட்டோர் அவரின் ஊரான தென்மாகாணத்தின் மாத்தறை மாவட்டத்திற்கு செல்லவுள்ளனா்.

தகவல்

எம்.ரீ.எம்.பாரிஸ் (ஊடகவியலாளா்)

உப தலைவா் – மட்டு மாவட்ட இளைஞா் கழகங்களின் சம்மேளனம்.

unnamed

Published by

Leave a comment