Category: Your Kattankudy
-
“இன்னும் 10 நாட்களில் ஆளும் தரப்பிலிருந்து அரைவாசிப்பேர் எம்முடன் இணைவர்”: மைத்திரி
கொழும்பு: நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை என்பதற்கு இன்று முற்றுப்புள்ளி வைக்கப்படும். எனவே நாளை அரசாங்கத்துக்கு இறுதி நாளாகும் என்று ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது. இலங்கையின் இணையத்தளம் ஒன்றுக்கு தகவல் தந்த ஐக்கிய தேசியக் கட்சியின் மூத்த உறுப்பினர் ஒருவர், இன்று நான்கு அரசாங்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் பொது வேட்பாளர் தரப்புக்கு வரவுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். நாடாளுமன்றம் இன்று 2014ம் ஆண்டுக்காக இறுதி அமர்வை நடத்தவுள்ளது.
-
“ரணில் அரசாங்கத்தில் இணைவார்”
கொழும்பு: தாம் அரசாங்கத்தில் இருந்து விலகுவதற்கு 11 மணித்தியாலங்களுக்கு முன்னர், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, தம்மிடம் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க அரசாங்கத்தில் இணையவுள்ளதாக குறிப்பிட்டதாக பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். கிருலப்பனையில் இடம்பெற்ற கூட்டம் ஒன்றிலேயே அவர் இந்த தகவலை வெளியிட்டார்.
-
பெண்களுக்கான பொதுக்கூட்டம் NFGGயின் ஏற்பாட்டில் இடம்பெற்றது
– ஊடகப்பிரிவு- NFGG, FM. பர்ஹான் காத்தான்குடி: நல்லாட்சிக்கான தேசிய முன்னணி பொது வேட்பாளர் மைத்திரிப்பால சிறிசேன அவர்களை ஆதரித்து ஏற்பாடு செய்திருந்த பெண்களுக்கான பொதுக்கூட்டம் ஒன்று நேற்று (11.12.2014) மாலை காத்தான்குடியில் இடம்பெற்றது. நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தின் மக்கள் அரங்கில் நடைபெற்ற மேற்படிக் கூட்டத்தில் மகளிர் குழு உறுப்பினர்கள், அங்கத்திவர்கள் என பெண்கள் பலர் கலந்துகொண்டிருந்தனர்.
-
குழுக்களின் கடந்த கால வரலாறு என்ன?
கொழும்பு: பெரிய மூங்கில் காட்டை எரிக்க ஒரு சின்ன தீக்குச்சி போதுமானது. நாட்டில் கடந்த காலங்களில் இனவாத தீக்குச்சியை ஆங்காங்கே கொழுத்தி விட்டு, முஸ்லிம்களை அடியோடு கருவறுக்க நினைத்தவரும் , இன்றும் கருவறுக்க நினைப்பவரும் , அதற்காய் தகுந்த தருணம் பார்த்துக் காத்துக் கொண்டிருப்பவருமான சம்பிக்க ரணவக்க என்ற ஜாதிஹ ஹெல உறுமயவின் முக்கியஸ்தர் இப்போது மைத்திரியோடு இணைந்திருப்பது அபாயகரமானதாகும்.
-
KCDAயினால் அல்-ஹிதாயா மகா வித்தியாலயத்திற்கு நிதி கையளிப்பு
மீராவோடை: மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தின், கோறளைப்பற்று மேற்கு கோட்டத்திற்குட்பட்ட பாடசாலையான மட்/மம/மீராவோடை அல்-ஹிதாயா மகா வித்தியாலயத்தில் 2013ஆம்ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட கணித, விஞ்ஞானப்பிரிவுகளில் கல்வி கற்கும் மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளுக்காக கல்குடா கலாசார அபிவிருத்தி நிறுவனத்தினால் 2014.12.11 ஆந்திகதி வியாழக்கிழமை சிறு தொகை நிதி கையளிக்கப்பட்டது.
-
தொடர்ந்தும் மைத்திரிக்கே அதிகமான வாக்குகள்
எமது இணையத்தள முகப்பில் இடப்பட்டிருக்கும் வாசகர்களுக்கான ‘ஒன்லைன்’ வாக்களிப்பில் தொடர்ந்தும் பொதுவேட்பாளர் மைத்திரிபால சிரிசேனாவே முன்னிலையில் இருந்துவருகிறார். உலகெங்கிலுமுள்ள எமது அபிமான வாசகர்களால் வாக்குகள் தொடர்ந்தும் மிக மிக ஆர்வமாக அளிக்கப்பட்டு வருகின்றன. எங்கே நீங்களும் உங்கள் ஒன்லைன் வாக்கை அளிக்கத் தவறாதீர்கள்.
-
“சர்வஜன வாக்கெடுப்பின் மூலமே அரசியலமைப்பை மாற்றுவேன்”: மஹிந்த
அநுராதபுரம்: சர்வஜன வாக்கெடுப்பின் மூலமே அரசியலமைப்பை மாற்றுவேன் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் நேற்று தெரிவித்தார். அரசியலமைப்பை மாற்றுவது பற்றியே இப்போது எங்கும் பேசப்படுகிறது. என்னால் மட்டுமே அதைச் செய்ய முடியும் எனக் குறிப்பிட்ட ஜனாதிபதி, கண்டியிலிருந்து எதிரணி எழுப்பிய கேள்விகளுக்கு எல்லாம் பதில் சொல்லியாயிற்று என்றும் கூறினார்.
-
“அநுராதபுர தேர்தல் பிரச்சார மைதானத்திற்கு 6 கோடியில் செங்கம்பள விரிப்பு: மஹிந்த நாசமாகப் போகிறார்”
அநுராதபுரம்: அநுராதபுரம் சல்காது மைதானம் சுமார் 6 கோடி ரூபா செலவில் அவசர அவசரமாக புனரமைக்கப்பட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் பிரச்சாரக்கூட்டம் நேற்று அநுராதபுரத்தில் இடம்பெற்ற நிலையில், ஐக்கிய தேசியக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர குற்றம் சுமத்தியுள்ளார். கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இந்தக்குற்றச்சாட்டை சுமத்தியுள்ளார்.
-
மைத்திரியை ஆதரித்து நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் மக்கள் சந்திப்பு ஓட்டமாவடியில் இடம்பெற்றது
– ஊடகப்பிரிவு, நல்லாட்சிக்கான தேசிய முன்னணி ஓட்டமாவடி: பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன அவர்களை ஆதரித்து நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் ஏற்பாட்டில் ஓட்டமாவடி பிரதேசத்தில் மக்கள் சந்திப்பு ஒன்று நேற்று வியாழக்கிழமை இடம்பெற்றது.
-
மூன்றில் இரண்டு பெரும்பான்மையை மஹிந்த அரசு இழந்தது!
கொழும்பு: அரசாங்கத்திலிருந்து இதுவரை 14 பாராளுமன்ற உறுப்பினர்கள் எதிரணிக்கு சென்றுள்ளதால் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கம் இழந்துள்ளது. மைத்திரிபால சிறிசேன, ராஜித சேனாரத்தின, துமிந்த திசாநாயக்க, நவீன் திசாநாயக்க, பாடலி சம்பிக்க ரணவக்க, அத்துரலிய ரத்ன தேரோ, சிகல உறுமய தலைவர் சோபித தேரர், குணசேகர, வசந்த, கலாநிதி ரஜிவ விஜேசிங்க, ஹூனைஸ் பாருக், இராஜதுரை, திகாம்பரம், சந்திரசேகரன் ஆகிய பாராளுமன்ற உறுப்பினர்கள் பொது எதிரணியில் இணைந்துள்ளார்.
-
“நீங்கள் எங்கள் செயலாளரை எடுத்தால் நாங்களும் உங்கள் செயலாளரை எடுப்போம்”
அநுராதபுரம்: ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் ஜனாதிபதித் தேர்தல் பிரசாரக் கூட்டம் அநுராதபுரத்தில் இன்று ஆரம்பமானது. கூட்டமைப்பின் ஜனாதிபதி வேட்பாளர், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் தலைமையில் இந்தப் பொதுக்கூட்டம் தற்போது அநுராதபுரம் பொது மைதானத்தில் நடைபெற்றது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ இந்த கூட்டத்தில் உரையாற்றினார்.
-
சீன மாகாணத் தலைநகரில் இஸ்லாமிய முகத்திரைக்கு தடை
ஷின்ஷியாங்: சீனாவின் மேற்குப் பகுதி மாகாணமான ஷின்ஷியாங் தலைநகரான, உரும்கி நகரில், பெண்கள் இஸ்லாமிய முகத்திரையை பொது இடங்களில் அணிந்து வருவதற்கு தடை விதிக்க அதிகாரிகள் உத்தேசித்திருக்கிறார்கள். இந்தத் தடையை ஆதரித்து உரும்கி நகர ஆட்சியாளர்கள் வாக்களித்திருக்கிறார்கள் என்று அரச ஊடகங்கள் கூறின.