கர்பாலாவில் 1.7 கோடி ஷியாக்கள் ஒன்று கூடினர்

karbala (2)கர்பலா: உலக ஷியா முஸ்லிம்கள் வருடாந்தம் கூடும் நிகழ்வு ஈராக்கிய நகரான கர்பலா ஏற்பாடு செய்துள்ளது. இஸ்லாமிய அரசின் (IS) சுன்னி தீவிரவாத தாக்குதல் அச்சுறுத்தலுக்கு மத்தியிலும் இந்த ஏற்பாடுகள் நடந்துள்ளன. இந்த அர்பாயீன் நிகழ்வுக்காக அந்த நகருக்குள் 1.7 கோடி ஷியா முஸ்லிம்கள் குவிந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கர்பலா நகருக்கு செல்லும் பாதைகளில் பாதுகாப்பு கடுமையாக்கப்பட்டுள்ளது. நபி (ஸல்) அவர்களின் பேரனான இமாம் குசைன் அவர்கள் இறந்த பின்னர் அவருக்கு அஞ்சலி செலுத்துவதற்காகவே இந்த நிகழ்வு அனுட்டிக்கப்படுகின்றது. இந்தப் போர்தான் சுன்னி மற்றும் ஷியா வகுப்பினரிடையே பெரும் பிளவை ஏற்படுத்தியது.

கர்பலா யுத்தம் முஹர்ரம் 10ம் நாள் ஹிஜ்ரி 61ம் வருடம் அதாவது கி.பி. 680 இல் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

karbala (2)

karbala

Published by

Leave a comment