தேர்தல் காரியாலயம் காத்தான்குடியில் திறந்து வைப்பு

unnamedபழுலுல்லாஹ் பர்ஹான்

காத்தான்குடி: 2015 ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி வேட்பாளர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை ஆதரிப்பதற்கான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின்  பிரதேச தேர்தல் காரியாலயம் ஒன்று 14-12-2014 ஞாயிற்றுக்கிழமை காத்தான்குடியில் திறந்து வைக்கப்பட்டது.

காத்தான்குடி பிரதான வீதியில் ஹிஸ்புல்லாஹ் மண்டபத்திற்கு அருகாமையிலும், காத்தான்குடி ரெலிகொம் வீதியிலும் நிறுவப்பட்டுள்ள இக்காரியாலயங்களை  ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மட்டக்களப்பு தேர்தல் தொகுதிக்கான தேர்தல் முகவரும், மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழுவின் தலைவரும், பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சருமான எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் கலந்து கொண்டு வைபவரீதியாக திறந்து வைத்தார்.

காத்தான்குடி நகர சபையின் தவிசாளர் எஸ்.எச்.எம். அஸ்பர் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் காத்தான்குடி நகர சபையின் பிரதித் தவிசாளர் எம். ஜெஸீம், காத்தான்குடி நகர சபை உறுப்பினர் அலி சப்ரி உட்பட ஊர் பிரமுகர்கள், கட்சி ஆதரவாளர்கள்,பொது மக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

This slideshow requires JavaScript.

Published by

Leave a comment