Category: Your Kattankudy
-
“கல்முனையை துண்டாடி சிதைக்க வேண்டாம் என அமைச்சர் அதாஉல்லாவிடம் பிச்சையாக கேட்கின்றேன்”
– ஹாசிப் யாஸீன் சாய்ந்தமருது: மாமனிதர் அஷ்ரஃப்பின் ஒசீயத்துக்கு மாற்றமாக முஸ்லிம்களின் முகவெற்றிலையான கல்முனையை துண்டாடி சிதைக்க வேண்டாம் என அமைச்சர் அதாஉல்லாவிடம் பிச்சையாக கேட்கின்றேன் என திகாமடுல்ல மாவட்ட லங்கா முஸ்லிம் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
-
கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்ற அசம்பாவிதங்கள் தொடர்பாக பொறியியலாளர் சிப்லி பாரூக்கின் கருத்து (ஒலிவடிவம்)
– பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: கிழக்கு மாகாண சபை உறுப்பினரும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் மட்டக்களப்பு தேர்தல் தொகுதிக்கான பிரதம ஒருங்கிணைப்பாளருமான பொறியியலாளர் சிப்லி பாரூக்கின் வீடு மற்றும் அலுவலகம் உட்பட அவரின் ஆதரவாளர்களின் வீடுகள் கடந்த 02-01-2015 வெள்ளிக்கிழமை இரவு சேதமாக்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிசார் தெரிவித்தனர்.
-
மைத்திரிக்கு ஆதரவு வழங்கக் காத்திருக்கும் ஆளுங்கட்சியின் முக்கிய 3 ‘புள்ளி’கள்!
கொழும்பு: ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மூவர் அரசாங்கத்தில் இருந்து பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவு வழங்க தயாராகி வருவதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்தன. ஆளும் கட்சியின் புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அருந்திக்க பெர்ணான்டோ, கம்பஹா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான சுதர்ஷினி பெர்ணான்டோ புள்ளே மற்றும் பண்டு பண்டாரநாயக்க ஆகிய மூவருமே இவ்வாறு பொது எதிரணி வேட்பாளருக்கு ஆதரவு வழங்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
-
அடுத்த 72 மணித்தியாலத்தில் சாதனை படைக்கவிருக்கும் கட்சி தாவல்கள்!!
கொழும்பு: எதிர்வரும் 5ம் திகதி முடிவடையும் எதிர்வரும் 72 மணி நேரத்தில் பல கட்சி தாவல்கள் இடம்பெறலாம் என பல்வேறு அரசியல் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதில் எதிரணிக்கு தாவும் அரசாங்கத்தை சேர்ந்த பலர் இருப்பதாகவும் அவர்களில் அமைச்சரவையில் முக்கிய பொறுப்புகளை வகித்தவர்களும் அடங்குவதாகவும் அந்த தகவல்கள் கூறியுள்ளன.
-
12,000 ஓட்டங்கள்: சங்கக்கார புதிய சாதனை
வெலிங்டன்: டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் மிகக் குறைந்த இன்னிங்சுகளில் 12,000 ஓட்டங்களை எடுத்து குமார் சங்கக்கார புதிய சாதனை புரிந்துள்ளார்.டெஸ்ட் போட்டிகளில் 12,000 ஓட்டங்களை எடுக்கும் ஐந்தாவது வீர்ர் இவர். தன்னுடைய 224 ஆவது இன்னிங்சில் அவர் இந்த மைல்கல்லை எட்டியுள்ளார்.
-
ஒன்றுபட்டு மாணவர் சமுதாயத்தை கட்டி எழுப்புவோம்
முகம்மது அஸ்ரஃப் ஏறாவூர்: மாணவர்கள் எனும் சொல்லாடல் ஒரு சக்தி மிக்க சமுதாயத்தைக் குறிக்கும் ஒன்றாகவுள்ளது. உலகெங்கும் கற்றல் செயன்முறைகளுடன் தொடர்புடைய இளம் சமுதாயத்தினரை குறிப்பதற்கு இச்சொல் பொதுவாக பயன்படுத்தப்படுகின்றது.
-
மன்னார் நகர சபை உறுப்பினர் நிலாமுதீன் நகுசீனுக்கு நேற்று அதிகாலை அச்சுறுத்தல்!
இர்ஷாத் ரஹ்மத்துல்லாஹ் மன்னார்: அமைச்சர் றிசாத் பதியுதீனுடன் அரசியல் செய்தால் உன்னை இல்லாமல் ஆக்கப் போகின்றேன். எதிர்வரும் 9 ஆம் திகதி உனக்கு என்ன நடக்கப் போகின்றது என மன்னார் நகர சபையின் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் உறுப்பினர் நிலாமுதீன் நகுசீனுக்கு நேற்று அதிகாலை இனம் தெரியாதவர்கள் அச்சுறுத்தல் விடுத்துள்ளதாக மன்னார் பொலீஸ் நிலையத்தில் இன்று காலை அவர் முறையிட்டுள்ளார்.
-
எமது சமூகத்தின் பாதுகாப்புக்காக எதனையும் இழக்க தயாராகவுள்ளேன் – றிசாத் பதியுதீன்
இர்ஷாத் ரஹ்மத்துல்லாஹ் அநுராதபுரம்: அல்லாஹ்வின் இல்லம் மீது எவர் கைவைத்தாலும் அல்லாஹ் அவர்களுக்கான தண்டனையினை வழங்குவான் என தெரிவித்துள்ள அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய தலைவர் றிசாத் பதியுதீன் எமது சமூகத்தின் பாதுகாப்புக்காக எதனையும் இழக்க தயாராகவுள்ளேன் என்றும் கூறினார்.
-
கிம்மாவினால் KCDA காரியாலயத்திற்கு குடிநீர் குழாய் அன்பளிப்பு
KCDA ஊடகப்பிரிவு கல்குடா: கல்குடா கலாசார அபிவிருத்தி நிறுவனத்தின் உறுப்பினர்கள் மற்றும் அல்-கிம்மா சமூக சேவைகள் நிறுவனத்தின் பணிப்பாளர் அஷ்ஷெய்க். எம்.எம்.எஸ். ஹாறூன் (ஸஹ்வி), செயலாளர் ஜனாப். ஐ.எம். றிஸ்வின் ஆகியோருக்கிடையிலான சினேகபூர்வமான சந்திப்பொன்று சில மாதங்களுக்கு முன் அல்-கிம்மாவின் காரியாலயத்தில் நடைபெற்றது.
-
முனாபிக் என்னும் சொல்லை பயன்படுத்தும் ஜனாதிபதி: பொதுபலசேனா அமைப்பின் பின்னணியில் இருப்பது அரசாங்கம் என்பது உறுதி
வன்னிக் குரலான் கொழும்பு: இந்த நாட்டில் இனங்களுக்கிடையில் புரிந்துணர்வினையும், மத சமத்துவத்தையும் ஏற்படுத்துவதுடன் முஸ்லிம்களுக்கு நானே காவலன் என கூறிவரும் ஜனாதிபதி வேட்பாளர் மஹிந்த ராஜபக்ஷ, முன்னால் அமைச்சரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் றிசாத் பதியுதீன் அவர்களை தொடர்ந்தேச்சையாக முனாபிக் என்று கூறிவருகின்றது தொடர்பில் முஸ்லிம்கள் மட்டுமல்லாமல் பெரும்பான்மை சிங்கள மக்களும் தமது அதிருப்தியினை வெளிப்படுத்த ஆரம்பித்துள்ளனர்.
-
NFGGயின் ஏற்பாட்டில் மைத்திரி பால சிறிசேனவை ஆதரித்து பாலமுனை சந்தியில் இடம்பெற்ற தேர்தல் பிரச்சாரப் பொதுக் கூட்டத்தில் இரண்டு விஷேட உரைகள் – ஓடியோ ஒலிப்பதிவு
ஒலிப்பதிவு-பழுலுல்லாஹ் பர்ஹான் பாலமுனை: நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் ஏற்பாட்டில் புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி பொது வேட்பாளர் மைத்திரி பால சிறிசேனவை ஆதரித்து 02-01-2015 நேற்று வெள்ளிக்கிழமை ஆரையம்பதி – பாலமுனை சந்தியில் இடம்பெற்ற தேர்தல் பிரச்சாரப் பொதுக் கூட்டத்தின் இரண்டு விஷேட உரைகள் ஓடியோ ஒலிப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
-
NFGGயின் ஏற்பாட்டில் மைத்திரி பால சிறிசேனவை ஆதரித்து ஆரையம்பதி பாலமுனை பிரதேசத்தில் தேர்தல் பிரச்சாரப் பொதுக் கூட்டம்
பழுலுல்லாஹ் பர்ஹான் பாலமுனை: நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் ஏற்பாட்டில் நல்லாட்சியை நோக்கிய ஆட்சிமுறை மாற்றத்தில் பங்காளிகளாவோம் எனும் தொனிப்பொருளில் 2015 ஜனாதிபதி தேர்தலில் புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி பொது வேட்பாளர் மைத்திரி பால சிறிசேனவை ஆதரித்து 02-01-2015 நேற்று வெள்ளிக்கிழமை தேர்தல் பிரச்சாரப் பொதுக் கூட்டமொன்று ஆரையம்பதி – பாலமுனை சந்தியில் இடம்பெற்றது.