பாலமுனை: நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் ஏற்பாட்டில் நல்லாட்சியை நோக்கிய ஆட்சிமுறை மாற்றத்தில் பங்காளிகளாவோம் எனும் தொனிப்பொருளில் 2015 ஜனாதிபதி தேர்தலில் புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி பொது வேட்பாளர் மைத்திரி பால சிறிசேனவை ஆதரித்து 02-01-2015 நேற்று வெள்ளிக்கிழமை தேர்தல் பிரச்சாரப் பொதுக் கூட்டமொன்று ஆரையம்பதி – பாலமுனை சந்தியில் இடம்பெற்றது.
நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தின் பொதுச் செயலாளர் பஷீர் ஆசிரியர் தலைமையில் இடம்பெற்ற இக் கூட்டத்தில் நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் தவிசாளரும், புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி பொது வேட்பாளர் மைத்திரி பால சிரிசேனவின் மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளருமான பொறியியலாளர் எம்.எம். அப்துர் ரஹ்மான் கலந்து கொண்டார்.
இங்கு 2015 ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் தவிசாளர் எம்.எம். அப்துர் ரஹ்மான், நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் தேசிய அமைப்பாளர் அஷ்ஷெய்க் எம்.பீ.எம். பிர்தௌஸ் நளீமி ஆகியோரினால் இரண்டு விஷேட உரைகள் நிகழ்த்தப்பட்டது.
இக் கூட்டத்தில் நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் தலைமைத்துவ சபை உறுப்பினர்களான பொறியியலாளர் பழுலுல் ஹக், அஷ்ஷெய்க் சபீல் நளீமி உட்பட நல்லாட்சிக்கான தேசிய முன்னணி மற்றும் ஜக்கிய தேசிய கட்சி ஆகியவற்றின் கட்சி முக்கியஸ்தர்கள், ஆதரவாளர்கள், பெரும் திரளான பொது மக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
Published by

Leave a comment