கிம்மாவினால் KCDA காரியாலயத்திற்கு குடிநீர் குழாய் அன்பளிப்பு

kcdaKCDA ஊடகப்பிரிவு

கல்குடா: கல்குடா கலாசார அபிவிருத்தி நிறுவனத்தின் உறுப்பினர்கள் மற்றும் அல்-கிம்மா சமூக சேவைகள் நிறுவனத்தின் பணிப்பாளர் அஷ்ஷெய்க். எம்.எம்.எஸ். ஹாறூன் (ஸஹ்வி), செயலாளர் ஜனாப். ஐ.எம். றிஸ்வின் ஆகியோருக்கிடையிலான சினேகபூர்வமான சந்திப்பொன்று சில மாதங்களுக்கு முன் அல்-கிம்மாவின் காரியாலயத்தில் நடைபெற்றது.

இப்பிரதேசத்தில் கிம்மாவினால் மேற்கொள்ளப்பட வேண்டிய பல வேலைத்திட்டங்கள் மற்றும்  KCDAயின் எதிர்கால வளர்ச்சிக்காகவும் பல கோரிக்கைகள் உள்ளடக்கபட்ட இரு அறிக்கைகள் கிம்மாவின் பணிப்பாளர் மற்றும் செயலாளர் ஆகியோரிடம் கையளிக்கப்ட்டது.

அந்த வகையில் KCDAயினால் முன்வைக்கப்பட்ட பல கோரிக்கைகளின் அடிப்படையில் முதலாவதாக  KCDA காரியாலயத்திற்கு மிகவும் தேவைப்பாடாகக் காணப்பட்ட குடிநீர் கிணறு அன்மையில் அல்-கிம்மாவினால் அன்பளிப்பு செய்யப்பட்டது.

இந்நிகழ்வு 2015.01.02 ஆந்திகதி வெள்ளிக்கிழமை அல்-கிம்மா சமூக சேவைகள் நிறுவனத்தின் செயலாளர் ஜனாப். ஐ.எம். றிஸ்வின் அவர்களால் KCDA நிருவாக சபை உறுப்பினர்களிடம் உத்தியோகபூர்வமாக அன்பளிப்பு செய்யப்பட்டது.

kcda

Published by

Leave a comment