12,000 ஓட்டங்கள்: சங்கக்கார புதிய சாதனை

Kumar-Sangakkara-007வெலிங்டன்: டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் மிகக் குறைந்த இன்னிங்சுகளில் 12,000 ஓட்டங்களை எடுத்து குமார் சங்கக்கார புதிய சாதனை புரிந்துள்ளார்.டெஸ்ட் போட்டிகளில் 12,000 ஓட்டங்களை எடுக்கும் ஐந்தாவது வீர்ர் இவர். தன்னுடைய 224 ஆவது இன்னிங்சில் அவர் இந்த மைல்கல்லை எட்டியுள்ளார்.

டெஸ்ட் போட்டிகளில் அதிக ஓட்டங்களை எடுத்துள்ள சச்சின் டெண்டூல்கரும், அவுஸ்திரேலிய அணியின் ரிக்கி பொண்டிங்கும் தம்முடைய 247 ஆவது இன்னிங்சில்தான்12,000 ஓட்டங்களைக் கடந்தனர்.

இவர்களைத் தவிர இந்தியாவின் ராகுல் டிராவிட்டும் தென் ஆப்பிரிக்காவின் ஜாக் கலிஸ்சும் 12,000 ரன்களுக்கு மேல் எடுத்துள்ளனர். தற்போது 37 வயதாகும் சங்கக்கார, நியுசிலாந்துக்கு எதிராக வெல்லிங்டன்னில் நடைபெற்றுவரும் இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதலாவது இன்னிங்சிஸ் 12,000 ஓட்டங்களைக் கடந்து சென்றார்.

Kumar-Sangakkara-007

இதுவரை 130 டெஸ்ட் போட்டிகளில் பங்குபெற்றுள்ள சங்கக்கார 37 சதங்களையும், 51 அரைச் சதங்களையும் அடித்துள்ளார். டெஸ்ட் போட்டிகளில் அதிக ஓட்டங்களைக் குவித்த இலங்கை வீரரும் இவரே.

Published by

Leave a comment