மன்னார்: அமைச்சர் றிசாத் பதியுதீனுடன் அரசியல் செய்தால் உன்னை இல்லாமல் ஆக்கப் போகின்றேன். எதிர்வரும் 9 ஆம் திகதி உனக்கு என்ன நடக்கப் போகின்றது என மன்னார் நகர சபையின் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் உறுப்பினர் நிலாமுதீன் நகுசீனுக்கு நேற்று அதிகாலை இனம் தெரியாதவர்கள் அச்சுறுத்தல் விடுத்துள்ளதாக மன்னார் பொலீஸ் நிலையத்தில் இன்று காலை அவர் முறையிட்டுள்ளார்.
இது தொடர்பில் அவர் கருத்துரைக்கையில்,
இந்த நாட்டில் ஜனநாயகமாக அரசியல் செய்யும் உரிமை இன்று இல்லாமல் போயுள்ள நிலையினை காணமுகின்றது. தான் விரும்புகின்ற கட்சிக்கோ அல்லது தலைமைகளுடனோ இணைந்து பணியாற்ற முடியாத அளவுக்கு அச்சுறுத்தல்கள் வருகின்றன.
கடந்த 4 ஆண்டு காலமாக மன்னார் நகர சபையின் எதிர்கட்சி(மத்திய அரசில் ஆளும் கட்சி) உறுப்பினராக இருந்த நான் எனது கட்சியான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைமைத்துவம் எடுத்த முடிவுக்கு கட்டுப்பட்டு இந்த தேர்தலில் எனகது தலைவரின் பணிப்பின் கீழ் அரசியல் செய்கின்றேன்.
இவ்வாறான ஒரு நிலையில் இன்று அதிகாலை உப்புக்குளத்தில் அமைந்துள்ள எனது வீட்டுக்கு முன்னால் மோட்டார் சைக்கிளில் வந்தவர்கள் சிலர் சிங்களத்திலும், தமிழிலும் என்மீது கடுமையாக ஏசினர். அதே வேளை உன்னை கொலை செய்வதாகவும், வெளியில் வருமாறு சத்தமிட்டனர்.
சுமார் 10 நிமிடம் வரை இவ்வாறு மோசமான முறையில் சத்திமிட்டதால் நான் எனது பாதுகாப்பு கருதி வீட்டை விட்டு வெளிவரவில்லை. அந்த வேளையிலும் இவர்கள் சில சோடா போத்தல்களை எனது வீட்டின் முற்பகுதியில் வீசி எறிந்தனர். என நகர சபை உறுப்பினர் நகுசீன் மன்னார் பொலீஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
அதே வேளை தேர்தலை கண்காணிக்கும் பெப்ரல் அமைப்பிடத்தில் இந்த முறைப்பாட்டையும் அவர் செய்துள்ளார்.
Published by


Leave a comment