இந்தியாவை வீட்டுக்கு அனுப்பியது அவுஸ்திரேலியா!

australiaசிட்னி: உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டியில், அவுஸ்திரேலியாவிடம் இந்தியா 95 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது.சிட்னியில் நடந்த அரையிறுதி ஆட்டத்தில், வெல்வதற்கு 329 ரன்கள் எடுக்கவேண்டிய நிலையில், இந்திய அணி 46.5 ஓவர்களில் 233 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தது.

இந்திய அணியில் அணித்தலைவர் எம்.எஸ்.தோணி 65 ரன்கள் எடுத்தார். ரோஹித் சர்மா 34 ரன்களையும், ஷிகர் தவான் 45 ரன்களையும், அஜிங்க்யா ரஹானே 44 ரன்களையும் எடுத்திருந்தனர்.

இந்தியாவின் முதல் கட்ட துடுப்பாட்டக்காரர்கள் முதலில் நல்ல முறையில் ஆடத் தொடங்கினாலும், பின்னர் விக்கெட்டுகள் மள மளவென சரிந்த நிலையில், ரன் எடுக்கவேண்டிய விகிதம் வேகமாக அதிகரித்து, இந்தியா வெற்றியை நழுவவிட்டது.

australia

அவுஸ்திரேலிய மட்டை பிடித்தபோது சதமடித்த ஸ்டீவ் ஸ்மித் ஆட்ட நாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

ஏற்கனவே நான்கு முறை உலகக் கோப்பையை வென்றுள்ள நாடான அவுஸ்திரேலிய இம்முறை நியுசிலாந்தை இறுதிப் போட்டியில் சந்திக்கிறது. நியுசிலாந்து உலகக் கோப்பை இறுதி ஆட்டத்துக்கு சென்றிருப்பது இதுவே முதல் முறை.வரும் 29ஆம் தேதி மெல்பர்னில் இறுதியாட்டம் நடக்கவுள்ளது.

இந்திய மீடியாக்களின் அளவுக்கதிகமான புகழ்ச்சியும், எதிர்பார்ப்புக்களும் இந்தியாவின் தோல்வியால் தகர்க்கப்பட்டிருக்கின்றன. நேற்று மீடியாக்களுக்கு வீறாப்பு விடுத்த வீராட் கோஹ்லி, ஒரு ஓட்டத்துடன் வந்த வேகத்தில் பெவிலியனுக்கு அனுப்பப்பட்டார்.

இந்திய வீரர்களின் வீடுகளுக்கு தற்பொழுது பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டிருப்பதாகவும், சில இடங்களில் அசம்பாவிதங்கள் ஏற்பட்டிருப்பதாகவும் அங்கிருந்துவரும் செய்திகள் தெரிவிக்கின்றன. SHM

Published by

Leave a comment