ராஞ்சி: அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான அரை இறுதி ஆட்டத்தில் இந்திய அணி தோல்வி கண்டதையடுத்து இந்திய அணியின் தலைவர் டோணியின் வீட்டுக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.உலகக் கோப்பை போட்டியில் அரையிறுதி ஆட்டத்தில் இந்திய அணி அவுஸ்திரேலிய அணியிடம் 95 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி கண்டது.
இதையடுத்து இந்திய ரசிகர்கள் டோணி மற்றும் முன்னணி வீரர்களின் வீடுகளை தாக்கக் கூடும் என்று அச்சம் ஏற்பட்டுள்ளது. ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் உள்ள இந்திய அணியின் தலைவர் டோணி மற்றும் அவரது சகோதரர் வீடுகளுக்கு பலத்த பொலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அதுபோல் கோஹ்லி உள்ளிட்ட பிற வீரர்கள் வீடுகளுக்கும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
அவுஸ்திரேலியாவில் இருந்து இந்திய வீரர்கள் தாய்நாடு திரும்பும் தகவலையும் ரகசியமாக வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. பிற கிரிக்கெட் வீரர்களின் பாதுகாப்பையும் உறுதி செய்யுமாறு காவல்துறையினருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Published by


Leave a comment