அல்மனார் மற்றும் ஹிறா பவுண்டேசன் இணைந்து நடாத்தும் போட்டி நிகழ்ச்சி

al manar– ஏ.எல். டீன் பைரூஸ்

காத்தான்குடி: அல் மனார் நிறுவனமும், ஸ்ரீ லங்கா ஹிறாபவுண்டேசனும் இணைந்து ‘விடியலை நோக்கிய சமூகம்’ எனும் செயற்றிட்டத்தின் ஒரு அங்கமாக ‘பழாயிலுஸ் ஸஹாபா’ போட்டி நிகழ்ச்சியொன்றினை நடாத்ததிட்டமிட்டுள்ளதாக அதன் பணிப்பாளர் அஷ்ஷெய்க் ஏ.எல்.எம். மும்தாஸ் மதனி தெரிவித்தார்.

நாடளாவியரீதியாக இடம்பெறவுள்ள இப்போட்டிக்காகவென’இஸ்லாத்தின் பார்வையில் ஸஹாபாக்கள்’எனும் நூல் இரண்டாம் பதிப்பாகபத்தாயிரம் பிரதிகளைவெளியிட்டுவைக்கும் நிகழ்வு அண்மையில் இடம்பெறவிருக்கிறது.

முஸ்லிம் சமய கலாசார திணைக்களத்தின் பணிப்பாளர் அஷ்ஷெய்க்எம்.எச்.எம். ஸமிலின் அணிந்துரையுடன் வெளியிடப்படவிருக்கும் இந்நூலானது, குறித்த போட்டிநிகழ்ச்சிக்கான கையேடாக இருப்பதுடன், மாவட்டம் தோறும் பெற்றுக் கொள்ளும் வகையிலான நடவடிக்கைகளில் காத்தான்குடி யூஸ் அமைப்பு ஈடுபட்டுள்ளது.

தற்காலத்து இளைஞர், யுவதிகள் சினிமாத்துறையின் நடிக, நடிகைகளுக்கு கொடுக்கின்ற முக்கியத்துவம் அதிகரித்து சீரழிந்துபோகின்ற பல நிகழ்வுகளை நாம் காணுகின்ற அதேவேளை, மேற்கத்தையநாடுகள் அதிலும் விசேடமாக இஸ்லாத்தைஆராய்ந்து முஸ்லிமான பலஅறிஞர்கள் இன்று பாரிய தஃவா பணிகளில் தம்மைஅர்ப்பணித்து செயலாற்றி வருவதை காணமுடிகிறது.

அந்தவகையில் ஸஹாபாக்களது வாழ்க்கைமுறை, அவர்களது இஸ்லாத்துக்கான அர்ப்பணிப்புபோன்ற விடயங்களை தெரியப்படுத்துகின்ற கடமை நம் எல்லோரையும் சேர்ந்ததாக விருக்கின்றது. எனவேதான் இச்செயற்றிட்டத்தின் மூலம் பல வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்துமுகமாக இப்புத்தகத்தின் இரண்டாம் பதிப்பு வெளியிடப்படவுள்ளது எனவும் அஷ்ஷெய்க் மும்தாஸ் மதனி குறிப்பிட்டார்.

குறைந்தது நூறு போட்டியாளர்களைக் கொண்டமாவட்டங்கள் அனைத்திலும் இப்போட்டிக்கான பரீட்சைகள் அந்தந்த மாவட்டங்களிலேயே ஒரேதினத்தில் இடம்பெறவிருப்பதுடன், குறைந்தளவிலான பரீட்சார்த்திகளைக் கொண்டவர்கள் அண்மையிலுள்ள மாவட்டங்களில் பரீட்சைகளை எழுதவும் ஏற்பாடுகள் செய்யப்படும்.

மாவட்டஅடிப்படையில் 80க்கு மேற்பட்ட புள்ளிகளை பெறும் மூன்று வெற்றியாளர்களுக்கு பணப்பரிசில்கள் வழங்கப்படவுள்ளதுடன், தேசியரீதியாக 50 ஆறுதல் பரிசில்களும் வழங்கப்படும்.

இதேவேளே 50 க்குமேற்பட்ட புள்ளிகளைப் பெறும் அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Published by

Leave a comment