
பல்வேறு துன்ப துயரங்களோடு வாழுகின்ற விசேட தேவையுடையோர் இளம் விதவைகள் மற்றும் பெற்றோரை இழந்த சிறுவர்களுக்கும் புனித ஹஜ்பெருநாள் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம் என காத்தான்குடி சமூகமதிப்பீட்டுக்கான அமைப்பின் தலைவரும் சமூக சேவையாளருமான இல்மி அஹமட் லெவ்வை தெரிவித்தார்.
நமது சமூகத்தைப் பொறுத்தவரையில் ஒரு வர்க்கத்தினர் பார்ப்பதற்கு வசதி படைத்தவர்களைப்போன்று காட்சி அளிப்பார்கள் ஆனால் உண்மையில் அவர்களினது அன்றாட ஜீவனோபாயத்தை கடத்துவது கூட கஸ்டமான நிலவரத்திலும் தமது பிள்ளைகளின் கல்வியையும் இடைநிறுத்தி கடைசிப்பந்திகளாக அனுப்பும் சூழ் நிலையிலும் இக்கூட்டத்தினர் இருப்பார்கள் இவ்வாறான வறுமைக்குள்ளும் இரந்து கேட்டு வாழவும் விரும்பவும் மாட்டார்கள்.
இவ்வாறானவர்களை அவர்களது வாழ்விடங்களுக்கு சென்று அவர்களினது அத்தியவசிய தேவைகளை மதிப்பீடுசெய்து கடந்த ஐந்து வருடங்களாக வலிந்துதவி வருகின்ற அமைப்பு என்ற அடிப்படையில் இப் புனிதநாளில் வாழ்த்துக்களை அனுப்பி அவர்களது மகிழ்ச்சியில் பங்கேற்பது பெரும் ஆத்ம திருப்தியைத் தருகின்றது என்று இல்மி அஹமட்லெவ்வை மேலும் தெரிவித்தார்.
அத்தோடு கடந்த ஐந்து வருடங்களுக்குள் நலிவுற்ற மக்களுக்கு தொடர்ச்சியாக 32 உதவுகின்ற நிகழ்வுகளை மிகவும் சிறப்பாக நடாத்துவதற்கு அனுசரனை உதவிகளை வழங்கிய மதிப்புக்குரிய நமது தனவந்தர்கள் நலன்விரும்பிகளுக்கும் இந்; நந்னாளில் வாழ்த்துக்களை சமர்பிப்பதோடு எதிர்பார்ப்பில்லாத உதவிகளை செய்து வருகின்ற இவர்களது பொருளாதாரத்தில் எல்லாம் வல்ல அழ்ழாஹ் பறகத்து செய்ய வேண்டும் எனவும் பிரார்த்திக்கின்றோம்.
அத்தோடு கடல்கடந்து வாழுகின்ற நம் இஸ்லாமிய சகோதரர்களுக்கும் ஊடக உறவுகளுக்கும் புனித தியாகத்திருநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றோம் எனவும் அவர் தெரிவித்தார்.
Leave a comment