-
ஹாசிப் யாஸீன்
கல்முனை: ஹஜ் பெருநாளை பிரதி அமைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸ் தனது சொந்த ஊரான கல்முனையில் மக்களுடன் கொண்டாடினார். இன்றைய ஹஜ் பெருநாள் தொழுகைக்காக கல்முனை முகைதீன் ஜூம்ஆப் பள்ளிவாசலுக்கு சென்ற பிரதி அமைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸ் தொழுகையை அங்கு நிறைவேற்றியதுடன் பெருநாள் குத்பா பிரசங்கத்திலும் கலந்து கொண்டார்.
அதனைத் தொடர்ந்து பள்ளிவாசல் நிர்வாகம், பொதுமக்கள், நண்பர்கள் மற்றும் ஆதரவாளர்களுடன் தனது ஹஜ் பெருநாள் வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்டதுடன் முஸாவாவும் செய்து கொண்டார். அத்துடன் மக்களுடனான பெருநாள் சிற்றூண்டியிலும் பிரதி அமைச்சர் ஹரீஸ் கலந்து கொண்டார்.
கல்முனை முகைதீன் ஜூம்ஆப் பள்ளிவாசலின் மினவறா (டோம்) வடிவமைக்கப்பட்டு இன்று அவ்விடத்திலும் தொழுகை நிறைவேற்றப்பட்டமை சிறப்பம்சமாகும்.



Leave a comment