-
எம்.எச்.எம். அன்வர்
காத்தான்குடி: ஹஜ்ஜூப் பெருநாளை முன்னிட்டு காத்தான்குடி பிரதேச கலாசார மத்திய நிலையத்தினால் ஹஜ்ஜூப் பெருநாள் விசேட கலை கலாசார நிகழ்ச்சி – 2015 (ஹிஜ்ரி 1436) எதிர்வரும் 25.09.2015 ஆம் திகதி வெள்ளிக்கிழமை பி.ப. 07.30 மணிக்கு காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் மண்டபத்தில் நடாத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
இந்நிகழ்ச்சியில் காத்தநகரின் முன்னணி கலைஞர்களான MCM.முஸ்தபா ஓய்வுபெற்ற ஆசிரியர்,ஜூனைதீன் ஆசிரியர்,செரன்டிப் முஸ்தபா மற்றும் அஸீஸ் மாமா ஆகியோரின் அறிவு பூர்வமான நகைச்சுவையான கலை கலாசார நிகழ்ச்சிகளும்,’நீதியின் நிழல்’ நாடகமும் இடம்பெறவுள்ளது.
இந்நிகழ்ச்சியில் அனைவரையும் கலந்து சிறப்பிக்குமாறு கலாசார நிலையப் பொறுப்பதிகாரியும் கலாசார மேம்பாட்டு உத்தியோகத்தருமான ஜனாப் MIMM.மஹ்பூழ் தெரிவித்தார்.

Leave a comment