ஹப்ஸா பெண்கள் அரபுக் கல்லூரியின் இரண்டாவது பட்டமளிப்பு விழா

grauatபழுலுல்லாஹ் பர்ஹான்

வெலிகம: தென்னிலங்கை வெலிகம ஹப்ஸா பெண்கள் அரபுக் கல்லூரியின் இரண்டாவது பட்டமளிப்பு விழா எதிர்வரும் சனிக்கிழமை பிற்பகல் 04.00மணிக்கு வெலிகமை நகர சபை மண்டபத்தில் வெலிகம ஹப்ஸா பெண்கள் அரபுக் கல்லூரியின் பிரதம நிறைவேற்றுப் பணிப்பாளரும் வெலிகம அல் இஹ்ஸான் நலன்புரிச் சங்கத் தலைவருமான எம்.ஓ.பத்ஹுர் ரஹ்மான் (பஹ்ஜி) தலைமையில் நடைபெறவுள்ளது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக வெலிகம நகர சபைத் தலைவர் எம். எச்.முஹம்மட்,கௌரவ அதிதியாக வெலிகம ஹப்ஸா பெண்கள் அரபுக் கல்லூரியின் தலைவரும் நிதாஉல் கைர் சர்வதேச அமைப்பின் தலைவருமான அஷ்ஷெய்க் ஹாலித் பின் ஸாலிஹ் அத்தாவூத் ஆகியோர் கலந்து கொள்ளவுள்ளதுடன் விசேட அதிதிகளாக றியாத் நகர் மஸ்ஜித் பேஷ்இமாம் அஷ்ஷெய்க் அபூ பிர்தௌஸ், காலி இப்னு அப்பாஸ் அரபுக் கல்லூரி முதல்வர் அஷ்ஷெய்க் டப்ளியூ. தீனுல் ஹஸன் (பஹ்ஜி) மற்றும் அதிதிகள், ஊர் பிரமுகர்கள் உட்பட பலரும் கலந்து கொள்ளவுள்ளனர்.

இதன்போது காலி இப்னு அப்பாஸ் அரபுக் கல்லூரி முதல்வர் அஷ்ஷெய்க் டப்ளியூ. தீனுல் ஹஸன் (பஹ்ஜி) சிறப்புரையாற்றவுள்ளார்.

இரண்டாவது பட்டமளிப்பு விழாவில் மௌலவியா ஆயிஷா அமீன், மௌலவியா பஸ்னா பாயிஸ், மௌலவியா ஸிஹ்னாஸ் பாயிஸ், மௌலவியா ஸாஜிதா பௌசுல் ஜெஸீம், மௌலவியா நுஸ்ரா அலி, மௌலவியா றிம்ஸா ஹுஸைன், மௌலவியா அஸ்மா ஸரூக், மௌலவியா ஸிஹ்னா அப்துல் ஹபீழ், மௌலவியா பஸ்னா குல்ஸார், மௌலவியா பஸ்னா முஸம்மில், மௌலவியா பர்ஸானா பாரிஸ், மௌலவியா சப்னா நாஸர், மௌலவியா சனப் ஜெஸூர், மௌலவியா ஸல்மா முஹம்மத் உள்ளிட்ட மௌலவியாக்கள் பட்டம் பெற்று வெளியாகவுள்ளனர்.

குறித்த வெலிகம ஹப்ஸா மகளிர் அரபுக் கல்லூரி சன்மார்க்கக் கல்வியுடன் உலகக் கல்வியையும் சேர்த்து மாணவிகளுக்கு கற்றுக்கொடுப்பதனால் சிறந்த மேம்பட்ட மகளிர் சமூகத்தை உருவாக்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Published by

Leave a comment