காத்தான்குடி நகர சபையின் மாதாந்த சபை அமர்வு

???????????????????????????????– பழுலுல்லாஹ் பர்ஹான்

காத்தான்குடி: காத்தான்குடி நகர சபையின் மாதாந்த சபை அமர்வு இன்று வியாழக்கிழமை காலை காத்தான்குடி நகர சபையின் கூட்ட மண்டபத்தில் காத்தான்குடி நகர சபைத் தவிசாளர் எஸ்.எச்.எம். அஸ்பர் தலைமையில் இடம்பெற்றது.

கூட்ட ஆரம்பத்தில் 2013 மே மாத மற்றும் ஜூன் மாத அவசர விஷேட கூட்டறிக்கைகள் மற்றும் 2013 மே மாத வருமான செலவினங்கள் என்பன வாசிக்கப்பட்டு பிழை திருத்தத்தின் பின்  அங்கீகரிக்கப்பட்டது.

குறித்த மாதாந்த சபை அமர்வில் ஹிஸ்புல்லாஹ் மண்டப அனுமதி தொடர்பாக விரிவாக ஆராயப்பட்டதுடன்,சபையின் வருமானப் பரிசோதகருக்கு அது தொடர்பாக அடுத்த அமர்வில் அறிக்கையொன்றை சமர்ப்பிக்கும்படி உத்தரவு வழங்கப்ட்டதுடன் மற்றும் அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் தொடர்பாக வரிவாக கலந்துரையாடப்பட்டது.

இதன் போது காத்தான்குடி நகர சபை தவிசாளர் ஆற்றிய உரையில் ஆற்றங்கரையில் குப்பை கொட்டுதல் தொடர்பான பிரச்சினைகள் ,ஆற்றங்கரையில் மைதானம் அமைத்தல் ,தவிசாளரின்; வெளிநாட்டு விஜயம், மடுவம் தொடர்பான அபிவிருத்திப் பணிகள்  இன்னோரன்ன வேலை திட்டங்கள் தொடர்பாக நகர சபை உறுப்பினர்களுக்கு தவிசாளர் தெளிவுபடுத்தினார்.

இவ் அமர்வில் காத்தான்குடி நகர சபை செயலாளர் சர்வேஸ்வரன், காத்தான்குடி நகர சபை பிரதித் தவிசாளர் ஜெஸீம்,காத்தான்குடி நகர சபை ஆளும் கட்சி உறுப்பினர்கான பாக்கீர், சியாட் அலிசப்ரி, நல்லாட்சிக்கான மக்கள் இயக்கம் கா-குடி நகர சபை உறுப்பினர்களான  சபீல் நளீமி , நஸீர், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் நகர சபை உறுப்பினர் சல்மா அமீர் ஹம்ஸா ஆகியோர் மற்றும் பிராந்திய ஊடகவியலாளர்கள் நகர  சபை உத்தியோகத்தர்கள் என  பலரும் பிரசன்னமாயிருந்தனர்.

asfar

??????????????????????????????????????????????????????????????

???????????????????????????????

Published by

Leave a comment