கொழும்பு: நாளை வெள்ளிக்கிழமை மேற்கிந்தியத் தீவுகளில் ஆரம்பமாகும் முக்கோணத் தொடரில், மேற்கிந்தியத் தீவுகள், இலங்கை மற்றும் இந்தியா ஆகிய 3 நாடுகள் பங்கெடுக்கின்றன.
ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் இம் மூன்று அணிகளும் தங்களைத் தாங்கள் விட்டுக் கொடுக்காமல் விளையாடி வந்தாலும், பலம் பொருந்திய இந்தியாவை எதிர்த்தாடுவதில் உலக கிரிக்கட் அணிகள் கோட்டை விட்டு விடுவது, இந்தியாவின் பலத்தை தெட்டத்தெளிவாக வெளிக்காட்டுவதாக அமைகின்றது.
இலங்கையின் இறுதிச் சுற்று சரிவுகள் 2007ம் ஆண்டிலிருந்து ஆரம்பமாகி வருகின்றன. அன்று முதல் இன்றுவரை சிரேஷ்ட கிண்ணங்களை வெல்லும் வாய்ப்பு, மிக எளிதாக இலங்கை அணியிடமிருந்து நழுவிச் செல்வது இலங்கை இரசிகர்களை ஏமாற்றம் செய்தே வருகின்றன.
2007 இல் இருந்து கை நழுவிச் செல்லும் இலங்கைக்கான வெற்றிகள் இலங்கையிலும் சரி, இலங்கைக்கு வெளியிலும்சரி அவற்றின் இழப்புக்கள் மீளப் பெறமுடியாதவை என்பதை கிரிக்கட் இரிகர்கள் அறிந்திருப்பீர்கள்.
இதன் பின்னர், 2009 இருபது 20 உலகக் கிண்ணம், 2011 உலகக் கிண்ணம், 2012 இருபது இருபது உலகக் கிண்ணம் மற்றும் கடந்த வாரம் நழுவிச் சென்ற ஐ.சி.சி சம்பியன் கிண்ணம் என்பவை மிகப் பெருமதி வாய்ந்தவை.
தோற்ற பின்னர் இரசிகர்களுக்கு வருத்தம் தெரிவிப்பதாலும், தலைமைப் பதவியை இராஜினாமாச் செய்வதாலும் நடந்தவைகளை மறக்கடிக்கச் செய்யலாம் என்ற நினைப்பில் இலங்கை அணி 2007 இல் இருந்து செயற்பட்டு வருவதானது, இலங்கை கிரிக்கட்டை அவர்களே ஏமாற்றும் செயலாக அமைந்து விடுகிறது.
ஐ.பி.எல் இல் மலிங்க 100 வீக்கட்டுக்களை வீழ்த்தலாம். ஆனால் இதே மலிங்கவால்தான் 2012 இருபது20 உலகக் கிண்ணமும், இவ்வருட ஐ.சி.சி கிண்ணமும் பறி போனதாக இலங்கை கிரிக்கட் தெரிவித்திருந்தாலும், பிரபலமான துடுப்பாட்ட வீரர்கள் தோல்வியடைந்த போட்டிகளில் எதைச் சாதித்தார்கள் என்ற கேள்விகளுக்கு இன்றுவரை விடை தேடிக் கொண்டிருக்கின்றனர்.
இந்திய துடுப்பாட்ட வீரர்கள் மலிங்கவின் பந்துகளை டென்னிஸ் பந்து கிரிக்கட் போல் லாவகமாக கையாண்டு, எல்லைக்கு வெளியே அனுப்புகின்றனர் என ஆங்கில வர்ணணைகள் தெரிவித்திருப்பது, மலிங்கவும், இலங்கை கிரிக்கட்டும் தங்களது கடந்த கால கசப்பான அனுபவங்களை தூசிதட்டி மீண்டும் புதுப்பித்துப் பார்க்க வேண்டும்.
மேற்கிந்திய தீவுகளில் இடம்பெறும் இம் முக்கோணத் தொடரில் மேற்கிந்தியாவின் ஆதிக்கம் தொடரும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. மிகச் சிறந்த பல்துறை அணியாக இம் முறை ஐ.சி.சி. தொடருக்கு வந்த மேற்கிந்திய தீவுகள் அணி காலநிலை பாதிப்பால் பிரகாசிக்காமல் போயிந்ததும் அறியத்தக்கது.
மேற்கிந்தியத் தீவு மைதானங்களில் கிரிக்கட் போட்டிகளைக் கண்டுகளிப்பதற்கு அங்குள்ள மக்களின் ஆர்வம் குறைந்து வருவதாக முன்னர் தெரிவிக்கப்பட்டிருந்தது.
மிக விசாலமான, உலகப் புகழ்பெற்ற மைதானங்களைக் கொண்ட மேற்கிந்தியத் தீவுகளில், அதிகளவான ஆசனங்கள் காலியாக இருப்பதை 2007 உலகக் கிண்ணம், 2010 இருபது 20 உலகக் கிண்ணம் போட்டிகளில் விமர்சிக்கப்பட்டிருந்தன.
எனினும் இந்தியாவுக்கான ஆதரவுகள் எப்போதும் இருந்தே வருகின்றன. இலங்கை அணிக்கு மைதான ஆதரவுகள் இருக்கப் போவதில்லை.
இலங்கைக்கு மிகச் சவாலாக அமையும் இந்தியா, மேற்கிந்திய தீவுகள் அணிகளை எவ்வாறு இத்தொடரில் இலங்கை சந்திக்கப்போகின்றது என்பது உலக கிரிக்கட் வல்லுனர்களின் மற்றொரு எதிர்பார்ப்பு.
நாளை வெள்ளிக்கிழமை உள்ளுர் நேரப்படி காலை 09:30 (இலங்கை: இரவு 8 மணி) ஜமைக்கா, சபினா பார்க்கில் இடம்பெறும் முதலாவது போட்டியில் மேற்கிந்தியத் தீவுகளை எதிர்த்து இலங்கை விளையாட இருக்கின்றது. இத்தொடரில் இலங்கையின் சகல துறை ஆட்டக்காரர் திலகரட்ன டில்சான், உபாதை காரணமாக உள்வாங்கப்படவில்லை.
எனவே கடந்த காலங்களில் தவறிய கனவுகளை இம்முக்கோணத் தொடரிலாவது இலங்கை சாதிக்குமா அல்லது, சாதிக்கத் தவறுமா என்பதை பொருத்திருந்தே பார்க்க வேண்டும்.



![pvw_20130621_1035_53311[1]](https://yourkattankudy.com/wp-content/uploads/2013/06/pvw_20130621_1035_533111.jpg?w=520&h=673)
Leave a comment