காத்தான்குடி: ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மஹிந்த சிந்தனையில் உருவான தெயட்ட கிருல தேசத்துக்கு மகுடம் வேலைத் திட்டத்தின் கீழ் (30) முப்பது இலட்சம் ரூபா செலவில் காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் மண்டபத்திற்கான பிரமாண்ட வரவேற்பு தோரணை அமைக்கப்படவுள்ளது.
குறித்த வரவேற்பு தோரணைக்கான நிர்மான வேலைகள் தற்போது துரிதகதியில் இடம்பெற்று வருகின்ற நிலையில் அவ் இடத்திற்கு இன்று வியாழக்கிழமை பிற்பகல் திடீர் விஜயமொன்றை மேற்கொண்ட மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழுவின் தலைவரும்,பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சருமான எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் அங்கு இடம்பெறும் அபிவிருத்தி பணிகளை நேரில் சென்று பார்வையிட்டதோடு மட்டுமன்றி அதிகாரிகளுக்கு அபிவிருத்தி தொடர்பாக அறிவுரைகளை வழங்கினார்.
இவ் விஜயத்தில் அவரோடு கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சிப்லி பாரூக்,காத்தான்குடி நகர சபைத் தவிசாளர் எஸ்.எச்.எம்.அஸ்பர் , பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வின் மக்கள் தொடர்பு அதிகாரி முஹம்மட் றுஸ்வின்,காத்தான்குடி நகர சபை உறுப்பினர் அலி சப்ரி மற்றும் தொழிநுட்ப உத்தியோகத்தர்கள் அதிகார்கள் என பலரும் பிரசன்னமாயிருந்தனர்.
தேசத்திற்கு மகுடம் வேலைத்திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படும் இறுதி வேலைத்திட்டம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a comment