டிரினாட்: மேற்கிந்தியத் தீவுகளில் கடந்த 3 வாரங்களாக இடம்பெற்றுவந்த முக்கோணத் தொடரின் இறுதிப்போட்டியில் இந்தியா வெற்றிபெற்றிருக்கின்றது. 201 வெற்றி ஓட்ட இலக்கை இலங்கை அணி இந்தியாவுக்கு வழங்கி இருந்தது. இவ் ஓட்ட இலக்கை இந்தியா மிக இலேசாக பெற்று வெற்றி பெரும் என்றே பலர் நினைத்திருந்தனர். எனினும் இலங்கையின் அபாரமான பந்து வீச்சுப் போராட்டத்தில் இந்தியா ஆரம்பம் முதலே தட்டுத் தடுமாறியது.
இதன் காரணமாக இந்தியாவின் ஓட்ட எண்ணிக்கை இறுதிவரை மந்தகதியில் இருந்தது.
15 ஓட்டங்கள் இறுதி ஓவரில் இந்தியாவுக்கு இலக்காக இருந்தது. இறுதி விக்கட் இணைப்பாட்டத்தில் இந்திய அணித் தலைவர் டோனியும், சர்மாவும் இணைந்திருந்தனர். இலங்கை அணியின் வீரர் இரங்க வீசிய இறுதி ஓவரில் 2 ஆறு ஓட்டங்களையும், ஒரு நாலு ஓட்டத்தையும் டோனி பெற்றுக் கொடுத்து, இந்தியாவின் தொடர்வெற்றியை தனதாக்கிக் கொண்டார்.
போட்டி இடம்பெற்றுக்கொண்டிருந்த போது, 43வது ஓவரில் எல்லையில் பந்து தடுப்பில் ஈடுபட்டிருந்த லசித் மாலிங்கவின் மீது தன்னீர் போத்தல் வீசப்பட்டது. அது அவரது உடலில் பட்டதும் அவர் மைதானத்தில் விழுந்தார். இவ் அசம்பாவிதத்தால் போட்டி 10 நிமிடங்கள்வரை தாமதமாகின.
இறுதிவரை போராடிய இலங்கைக்கு வெற்றி இலகுவாக கிடைக்கும் என்றே அனைவரது எதிர்பார்ப்பும் இருந்தது. எனினும் கடந்த போட்டிகளில் உடல் உபாதை காரணமாக ஓய்விலிருந்து நேற்றைய போட்டியில் மீண்டும் விளையாடிய இந்திய அணியின் தலைவர் மஹேந்திர சிங் டோனியால் எதிர்பாராத விதமாக போட்டி திசை திருப்பப்பட்டது.
இலங்கையின் இறுதிப் போட்டி தோல்விகளில் ஒன்றாக இத்தொடரும் பதிவாகின்றமை ஓர் கவலைக்குரிய விடமே!
![994495_10200174225697788_1753329431_n[1]](https://yourkattankudy.com/wp-content/uploads/2013/07/994495_10200174225697788_1753329431_n1.jpg?w=150&h=100)
![994495_10200174225697788_1753329431_n[1]](https://yourkattankudy.com/wp-content/uploads/2013/07/994495_10200174225697788_1753329431_n1.jpg?w=780&h=520)
![994505_10200174225937794_565081589_n[1]](https://yourkattankudy.com/wp-content/uploads/2013/07/994505_10200174225937794_565081589_n1.jpg?w=780&h=427)
![161737[1]](https://yourkattankudy.com/wp-content/uploads/2013/07/1617371.jpg?w=780&h=553)
Leave a comment