
பழுளுல்லாஹ் பர்ஹான்
காத்தான்குடி: காத்தான்குடி அல்மனார் இஸ்லாமிய அறிவியற் கல்லூரியின் பொதுச் செயலாளர் ஏ.எல்.எம்.மும்தாஸ் மதனியின் தந்தை எம்.எம்.ஆதம்லெப்பை (ஓய்வு பெற்ற அதிபர்) (வயது85) இன்று புதன்கிழமை பிற்பகல் 05.00மணியளவில் காத்தான்குடி 02 இமாம் கொமைனி வீதியில் உள்ள அவரது இல்லத்தில் வைத்து வபாத்தானார்.
இவர் கடந்த சில தினங்களாக நோய்வாய்ப்பட்ட நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்ததுடன் இன்று காலை வைத்தியசாலையிலிருந்து வீட்டிற்கு கொண்டுவரப்பட்டு இன்று பிற்பகல் 05.00 மணியளவில் வபாத்தானார்.
அன்னாரின் ஜனாசா இன்ஷா அல்லாஹ் இன்று இரவு 11.00 மணிக்கு காத்தான்குடி முகைதீன் மெத்தைப் பெரிய ஜும்மாப் பள்ளிவாயலில் தொழுகை நடாத்தப்பட்டு அதே மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.
இவர் பிரபல ஆசிரியர் என்பதுடன் ஸாவியா மகளிர் வித்தியாலய அதிபர் A. L. நயிமா மற்றும் A. L. அம்ஜத், A. L. முரீத் ஆகியோரின் தந்தை என்பதும் குறிப்பிடத்தக்கது.
அன்னாரின் மறுமை வாழ்வுக்காக நாம் அனைவரும் இப் புனித ரமழான் மாதத்தில் பிரார்த்திப்போமாக.

Leave a comment