உலகக் கிண்ண கிரிக்கட் 2015 போட்டிகளுக்கு அயர்லாந்து தெரிவு!

ireland-MJ

டுபாய்: உலகக் கிண்ண லீக் சம்பியன்ஸிப் போட்டியில் நெதர்லாந்தை வீழ்த்திய அயர்லாந்து அணி 2015ஆம் ஆண்டு உலகக்  கிண்ண கிரிக்கெட் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. 2015ஆம் ஆண்டு உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியை வுஸ்திரேலியாவும் நியூசிலாந்தும் இணைந்து நடத்துகின்றன.

அயர்லாந்து 3வது முறையாக உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்க இருக்கிறது. நெதர்லாந்துக்கு எதிராக நேற்று ஆம்ஸ்டெர்டமில் நடைபெற்ற போட்டியில் அபாரமாக விளையாடியது அயர்லாந்து. அந்த அணியின் ஜோய்சி 96  ஓட்டங்களை ஆட்டமிழக்காமல் பெற்றிருந்தார்.

உலகக் கிண்ண போட்டிகளில் கடந்த 20 ஆண்டுகளாக அயர்லாந்து இடம்பிடித்து வந்தது குறிப்பிடத்தக்கது.

Published by

Leave a comment