வடக்கு உட்பட 3 மாகாணங்களுக்கான வேட்பு மனுக்கள் கோரப்பட்டுள்ளன

northகொழும்பு: இலங்கையில் மூன்று மாகாண சபைகளுக்கான வேட்பு மனு தாக்கல் செய்வதற்கான திகதியை தேர்தல் திணைக்களம் அறிவித்துள்ளது. வடமாகாணம், மத்தியமாகாணம், வடமேல் மாகாணம் ஆகிய மூன்று மாகாண சபைகளுக்குமான வேட்பு மனுக்கள் இம்மாதம் 25 ஆம் திகதி தொடக்கம் ஆகஸ்ட் மாதம் முதலாம் திகதி வரையில் ஏற்றுக் கொள்ளப்படும் என தேர்தல் ஆணையாளர் அறிவித்துள்ளார்.

இந்த மூன்று மாகாணங்களில் குறிப்பாக வட மாகாணத்திற்கான தேர்தல் நடத்தப்படுமா இல்லையா என்று பலத்த ஐயப்பாடு நிலவிய சூழலிலேயே வேட்பு மனுக்களை ஏற்பதற்கான திகதி அறிவிக்கப்பட்டுள்ளது.

வடமாகாண சபையின் காணி, பொலிஸ் அதிகாரங்களை இல்லாமல் செய்துவிட்டே அந்த சபைக்கான தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று தெற்கில் உள்ள சிங்கள தீவிர அரசியல் சக்திகள் கோரி வந்திருந்தன. இந்தக் கோரிக்கையை ஏற்று அவ்வாறு அதிகாரங்களை தேர்தலுக்கு முன்னர் இல்லாமல் செய்வதற்கான முயற்சிகளும் அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது,

இருப்பினும் வடமாகாண சபைத் தேர்தலானது, மாகாண சபைகளுக்கான அதிகாரங்கள் குறைக்கப்படாத நிலையிலேயே நடத்தப்பட வேண்டும் என்று இந்தியாவும் குரல் கொடுத்திருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

– BBc

Published by

Leave a comment