கயானா: நேற்று மாலை கயானா மைதானத்தில் இடம்பெற்ற மேற்கிந்தியத் தீவுகள் மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான 5 போட்டிகள் கொண்ட முதலாவது ஒருநாள் சர்வதேச போட்டியில் பாகிஸ்தான் 126 ஓட்டங்களால் அபார வெற்றி பெற்றது.
நீண்ட நாட்களாக கிரிக்கட் தொடர்களில் பங்குபற்றுவதற்கு பாகிஸ்தான் கிரிக்கட் சபையால் சந்தர்ப்பம் வழங்காது புறக்கணிக்கப்பட்டிருந்த முன்னாள் பாகிஸ்தான் அணியின் தலைவரும் சகலதுறை ஆட்ட வீரருமான சஹீட் அப்ரிடி நேற்றைய போட்டியில் தனது திறமையை தன்னைப் புறக்கணித்தவர்களுக்கு மாத்திரமன்றி, உலகுக்கும் மீண்டும் ஒரு முறை நிரூபித்திருந்தார்.
ஆரம்பம் முதல் தட்டுத் தடுமாறியிருந்த பாகிஸ்தான் அணியை 55 பந்துகளை எதிர்நோக்கி ஐந்து ஆறு ஓட்டங்களையும், 6 நான்கு ஓட்டங்களையும் அதிரடியாக தனது அணிக்கு பெற்றுக் கொடுத்து, தனது 76 ஓட்டங்களுடன், நூறு ஓட்டங்களைக்கூட பெற முடியாதிருந்த தனது அணியை இருநூறு ஓட்டங்களைத் தாண்டுவதற்கு வழிசமைத்தார்.
இதே போல் பந்து வீச்சில் 9 ஓவர்கள் வீசி, 3 ஓட்டமற்ற ஓவர்களுடன், 12 ஓட்டங்களை மாத்திரம் கொடுத்து 7 விக்கட்டுக்களை வீழ்த்தி உலக தரவரிசையில் இரண்டாவது அதி சிறந்த பந்து வீச்சைப் பெற்ற வீரர் எனும் சாதனையையும் நேற்றைய போட்டியில் பெற்றிருந்தார்.
பாகிஸ்தான் அணியின் தலைவர் மிஸ்பாஹூல் ஹக், பயிற்றுவிப்பாளர் டேவிட் வட்மோர், மற்றும் தன்னை இதுவரைக்கும் புறக்கணித்த பாகிஸ்தான் கிரிக்கட் சபை சிரேஸ்ட உறுப்பினர்களும், முன்னாள் வீரர்களும் சஹீட் அப்ரிடுக்கு தற்பொழுது பாராட்டுக்களைத் தெரிவித்துவருகின்றனர்.
போட்டி நாயகனாக சஹீட் அப்ரிடி தெரிவு செய்யப்பட்டிருந்தார்.
ஒருநாள் சர்வதேசப் போட்டியில் சிறந்த பந்துவீச்சுப் பொருதியைப் பெற்றிருக்கும் முதல் 7 வீரர்கள்
| Player | Overs | Mdns | Runs | Wkts | Econ | Team | Opposition | Ground | Match Date | Scorecard | |
|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
| WPUJC Vaas | 8.0 | 3 | 19 | 8 | 2.37 | Sri Lanka | v Zimbabwe | Colombo (SSC) | 8 Dec 2001 | ODI # 1776 | |
| Shahid Afridi | 9.0 | 3 | 12 | 7 | 1.33 | Pakistan | v West Indies | Providence | 14 Jul 2013 | ODI # 3389 | |
| GD McGrath | 7.0 | 4 | 15 | 7 | 2.14 | Australia | v Namibia | Potchefstroom | 27 Feb 2003 | ODI # 1970 | |
| AJ Bichel | 10.0 | 0 | 20 | 7 | 2.00 | Australia | v England | Port Elizabeth | 2 Mar 2003 | ODI # 1976 | |
| M Muralitharan | 10.0 | 1 | 30 | 7 | 3.00 | Sri Lanka | v India | Sharjah | 27 Oct 2000 | ODI # 1650 | |
| Waqar Younis | 10.0 | 0 | 36 | 7 | 3.60 | Pakistan | v England | Leeds | 17 Jun 2001 | ODI # 1724 | |
| Aaqib Javed | 10.0 | 1 | 37 | 7 | 3.70 | Pakistan | v India | Sharjah | 25 Oct 1991 | ODI # 685 |
![shahid-afridi-pakistan_2973122[1]](https://yourkattankudy.com/wp-content/uploads/2013/07/shahid-afridi-pakistan_29731221.jpg?w=150&h=78)
![161985[1]](https://yourkattankudy.com/wp-content/uploads/2013/07/1619851.jpg?w=780&h=600)
![shahid-afridi-pakistan_2973122[1]](https://yourkattankudy.com/wp-content/uploads/2013/07/shahid-afridi-pakistan_29731221.jpg?w=496&h=259)
Leave a comment