இங்கிலாந்து செப்பீல்ட் நகரில் நேற்று ஏற்பட்ட பாரிய தீ விபத்து!

fire (2)-MJ

செப்பீல்ட்: இங்கிலாந்து செப்பீல்ட் நகரில் உள்ள பிளாஸ்டிக் தொழிற்சாலையில் நேற்று ஞாயிறு பி.ப 2:30 மணியளவில் ஏற்ப்டட பாரிய தீ விபத்தினால் செப்பீல்ட் நகரம் புகை மண்டளமாகக் காட்சியளித்தது. சுட்டெரிக்கும் வெயிலில் மக்கள் வார இறுதி நாளைக் கொண்டாடிக் கொண்டிருந்த போது வானில் ஏற்பட்ட பாரிய புகை மண்டளத்தைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

ஏற்றுமதிக்காக தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்த 20 தொன் நிறையுள்ள பிளாடிக் பொருட்கள் எரிந்துள்ளன. உள்ளுர் மற்றும் வெளி இடங்களிலிருந்து அழைக்கப்பட்ட 50 தீயணைப்பு படையினர் ஸ்தலத்தில் விரைந்து தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.

இச்சம்வத்தினால் இத் தொழிற்சாலையின் சுற்றுப்புறச் ச10ழலில் வசிக்கும் பொதுமக்கள் தங்களது வீடுகளின் கதவுகளையும் யண்ணல்களையும் மூடிவிட்டு வெளியேறுமாறு பணிக்கப்பட்டனர்.

இச்சம்பவத்தில் எவரும் காயமடையவில்லை. எனினும் பாரிய அளவிலான பொருட் சேதங்கள் ஏற்பட்டிருப்பதுடன், தொழிற்சாலைக் கட்டடம் முற்றாக எரிந்துள்ளது.

fire

fire (2)

fire (3)

Published by

Leave a comment