Author: yourkattankudy.com
-
தென்கிழக்கில் இருபத்தேழாம் இரவு…
கல்முனை: இருபத்தேழாம் இரவை முன்னிட்டு நேற்றிரவு சாய்ந்தமருது, கல்முனை, மருதமுனை ஆகிய ஊர்களில் பள்ளிவாயல்கள் அலங்கரிக்கப்பட்டு மக்கள் தொழுகைகளில் ஈடுபடுவதையும், மக்கள் பொருட்களைக் கொள்வனவு செய்வதையும் காணலாம்.
-
சிறுவர் துஷ்பிரயோகத்தை ஊக்குவிப்பதில் இணையத்தளங்கள் தூண்டுகோலாக அமைகின்றன
சிறுவர் என்பதற்குரிய வரைவிலக்கணம் பதினெட்டு வயதிற்கு குறைந்த ஆண், பெண் என்பதாகும். இது உலகளாவிய ரீதியில் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு வரைவிலக்கணமாகும். ஐக்கிய நாடுகள் சபையின் சிறுவர் தொடர்பான சமவாயம் இதனையே வெளிப்படுத்துகின்றது.சிறுவர்கள் இன்றைய எமது சமூகத்தின் நாளைய சிறந்த பயனுக்காக விதைக்கப்படும் விதைகள் என்பது யாவரும் அறிந்த விடயம்.
-
அமெரிக்கவாழ் இஸ்லாமிய அறிஞர் சென்னையில் நிகழ்த்தவிருந்த சொற்பொழிவு இடைநிறுத்தம்!!
சென்னை: அமெரிக்கவாழ் இஸ்லாமிய அறிஞர் சென்னையில் நிகழ்த்தவிருந்த சொற்பொழிவு ரத்தானது தொடர்பில் கண்டங்களும் விமர்சனங்களும் எழுந்துள்ளன. ஆப்ரிக்க வம்சாவளி அமெரிக்கரான வர்ஜினியா காமன்வெல்த் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக இருக்கும் ஆமினா வதூத் அவர்கள் சென்னை பல்கலைக்கழகம் மற்றும் தனியார் பெண்கள் கல்லூரி ஒன்றில் இஸ்லாம், பாலினம் மற்றும் சீர்திருத்தம் குறித்து உரையாற்றவிருந்தார்.
-
சாய்ந்தமருது இளைஞர் அமையம் ஏற்பாடு செய்திருந்த ‘டியுக் எடின் பார்க்’ சர்வதேச விருதுப் பிரகடனம்
– பழுளுல்லாஹ் பர்ஹான் சாய்ந்தமருது: சாய்ந்தமருது இளைஞர் அமையம் ஏற்பாடு செய்திருந்த ‘டியுக் எடின் பார்க்’ சர்வதேச விருதுப் பிரகடனமும் இப்தார் நிகழ்வும் நேற்று (04.08.2013) பரடைஸ் வரவேற்பு மண்டபத்தில் நடைபெற்றது. இளைஞர் பாராளுமன்ற உறுப்பினரும் சகவாழ்வு பிரதி அமைச்சருமான ஏ.எல்.எம்.றிசான் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் சாய்ந்தமருது ஜூம்ஆ பெரிய பள்ளிவாசல் பேஸ் இமாம் மௌலவி எம்.ஐ.ஆதம்பாவா றசாதியினால் சிறப்புரை நிகழ்த்தப்பட்டது.
-
நோன்புப் பெருநாளைக்கு தயாராகும் எழில்மிகு காத்தநகர் பிரதான வீதி
– பழுளுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: புனித நோன்புப் பெருநாளை முன்னிட்டு கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம்கள் செறிந்து வாழும் காத்தான்குடிப் பிரதேசத்தில் பிரதான வீதியில் பூத்துக் குழுங்கும் எழில்மிக்க பேரீத்தம்பழ மரங்களில் வண்ண வண்ண நிறத்தில் சிறிய மின்குமிழ்கள் பொறுத்தப்பட்டு பிரதான வீதி அலங்கரிக்கப்பட்டுள்ளது.
-
மட்டு கல்முனை பிரதான வீதி பெரிய நீலாவனைப் பகுதியில் வாகன விபத்து
– பழுளுல்லாஹ் பர்ஹான் கல்முனை: மட்டக்களப்பு கல்முனை மருதமுனை பிரதான நெடுஞ்சாலையில் இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் பாரிய காயங்களுக்கு மத்தியில் கல்முனை ஆதார வைத்தியசாலை அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கல்முனை தலைமையகு மோட்டார் போக்குவரத்து பொலிசார் தெரிவித்தனர்.
-
5அடி நீளமான முதலை திடீரென வீட்டிற்குள் உட்புகுந்ததால் பாண்டிருப்புப் பகுதியில் பதற்றம்
– பழுளுல்லாஹ் பர்ஹான் பாண்டிருப்பு: மட்டக்களப்பு- கல்முனை பிரதான வீதி மருதமுனை எல்லைக்குட்பட்ட பாண்டிருப்புப் பகுதியில் இன்று ஞாயிற்றுக்கிழமை இரவு 08.30மணயளவில் சுமார் 5அடி நீளமான முதலை குளமொன்றிலிருந்து வீடொன்றிக்குள் புகுந்ததையடுத்து அப்பகுதி மக்கள் ஒருவித பீதியுடனும் அச்சத்துடனும் காணப்பட்டனர்.
-
ஸ்ரீ லங்கா ஹிறா பவுன்டேஸன் நிறுவனத்தின் அனுசரனையில் காத்தான்குடி அல்-மனார் இஸ்லாமிய அறிவியற் கல்லூரி ஏற்பாடு செய்த மாபெரும் இப்தார் நிகழ்வு
– பழுளுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: ஸ்ரீலங்கா ஹிறா பவுன்டேஸன் நிறுவனத்தின் அனுசரனையில் காத்தான்குடி அல்-மனார் இஸ்லாமிய அறிவியற் கல்லூரி ஏற்பாடு செய்த மாபெரும் இப்தார் நிகழ்வு காத்தான்குடி அல் மனார் இஸ்லாமிய அறிவியற் கல்லூரியின் பொதுச் செயலாளர் மும்தாஸ் மதனி தலைமையில் இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை இடம்பெற்றது.
-
ஆளும் கட்சியினை ஆதரிப்பதன் மூலம் மட்டுமே மக்கள் இழந்ததைப் பெற்றுக்கொள்ள முடியும் – அப்துல் றிப்கான் பதியுதீன்
இர்ஷாத் றஹ்மத்துல்லா தலைமன்னார்: கடந்த யுத்தம் ஏற்படுத்தி பாதிப்புக்களால் எமது மாவட்ட மக்கள் இழந்தது ஏராளம்.அவற்றில் பெறக் கூடியவற்றை பெற்றுக் கொள்ளும் சந்தர்ப்பம் ஆளும் கட்சியினை ஆதரிப்பதன் மூலம் மட்டுமே பெற்றுக் கொள்ள முடியும் என்று வடமாகாண சபைக்கு ஜக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் மன்னார் மாவட்ட முதன்மை வேட்பாளராக போட்டியிடும் அப்துல் றிப்கான் பதியுதீன் கூறினார்.
-
முஸ்லிம்களுக்கான காணிப்பிரச்சினை தொடர்பாக நடைபெற்ற விசேட கூட்டத்தில் அமைச்சர் உதுமாலெப்பை மாகாண உறுப்பினர் பிரியந்தபத்திரன மோதல்!
– பஹ்மி யூஸூப் திருகோணமலை: திருமலை மாவட்டத்தில் புல்மோட்டை, அரிசிமலை, பொன்மலைக்குடா, தேத்தாவடித்தீவு, வீரந்தீவு, மன்கிரிமலை பிரதேசங்களில் முஸ்லிம்களுக்கு சொந்தமான காணிகளுக்குள் முஸ்லிம் மக்கள் செல்வதற்கு பாதுகாப்பு படையினரும், வெளி மாவட்டத்தில் இருந்து வந்த பௌத்த பிக்குமார்களும்
-
தந்தையை இழந்த அனாதைச் சிறார்களுக்கான நிதி வழங்கள் நிகழ்வு
– இஸ்லாமிய நிலையம் காத்தான்குடி: ஜம்இய்யதுஸ் ஸபாப் அனுசரனையுடன் காத்தான்குடி இஸ்லாமிக் சென்றர் ஏற்பாட்டில் தந்தையை இழந்த அனாதைச் சிறார்களுக்கான நிதி வழங்கும் வைபவம் 04.08.2013 ஞ}யிற்றுக்கிழமை காலை 10.00 மணியளவில் ஜாமிஉத் தௌஹீத் பள்ளிவாயலில் நடைபெற்றது. இந்நிகழ்வில் காத்தான்குடியைச் சேர்ந்த சுமார் 40
-
றமழான் கால பாடநெறிகளை பூர்த்திசெய்த மாணவர்களுக்கான பரிசில்கள் வழங்கும் நிகழ்வு
– இஸ்லாமிய நிலையம் காத்தான்குடி: காத்தான்குடி இஸ்லாமிக் சென்றர் ஏற்பாட்டில் வருடந்தோறும் றமழான் காலங்களில் மாணவர்களின் நலன் கருதி நடாத்தப்படும் இஸ்லாமிய கற்கை நெறியில் இவ்வருடம் 60 மாணவர்கள் கலந்து கொண்டனர். கற்கை நெறியினைப் பூர்த்தி செய்து இறுதியில் நடாத்தப்பட்ட பரீட்சையில் பங்கு பற்றிய மாணவர்களுக்கான பரிசில்கள்