மட்டு கல்முனை பிரதான வீதி பெரிய நீலாவனைப் பகுதியில் வாகன விபத்து

DSC08525[1]– பழுளுல்லாஹ் பர்ஹான்

கல்முனை: மட்டக்களப்பு கல்முனை மருதமுனை பிரதான நெடுஞ்சாலையில் இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை  இடம்பெற்ற  வாகன விபத்தில் ஒருவர் பாரிய காயங்களுக்கு மத்தியில் கல்முனை ஆதார வைத்தியசாலை அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கல்முனை தலைமையகு மோட்டார் போக்குவரத்து பொலிசார் தெரிவித்தனர்.

 பெரிய நீலாவனை விஷ்னு அறிவகத்திற்கு முன்னால்  மட்டக்களப்பில் இருந்து கல்முனை நோக்கி பயனித்த கார் ஒன்று டிப்பர் வாகனத்துடன் மோதியதிலேயே குறித்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

 மோதுண்ட கார் மற்றும் டிப்பர் கல்முனைப் பொலிஸ் நிலையத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளன.

 இன்று மாலை 06.55மணியளவில் இடம்பெற்ற குறித்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கல்முனைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

DSC08525[1]

DSC08531[1]

DSC08540[1]

Published by

Leave a comment