– இஸ்லாமிய நிலையம்
காத்தான்குடி: ஜம்இய்யதுஸ் ஸபாப் அனுசரனையுடன் காத்தான்குடி இஸ்லாமிக் சென்றர் ஏற்பாட்டில் தந்தையை இழந்த அனாதைச் சிறார்களுக்கான நிதி வழங்கும் வைபவம் 04.08.2013 ஞ}யிற்றுக்கிழமை காலை 10.00 மணியளவில் ஜாமிஉத் தௌஹீத் பள்ளிவாயலில் நடைபெற்றது. இந்நிகழ்வில் காத்தான்குடியைச் சேர்ந்த சுமார் 40 சிறார்களுக்கு உதவித் தொகை வழங்கிவைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் ஸபாப் அனாதைப் பிரிவின் மட்டக்களப்பு மாவட்ட பொறுப்பாளர் அஷ்ஷெய்ஹ் அறபாத் (ஸஹ்வி) அவர்கள் கலந்து கொண்டு மாணவர்களுக்கான நிதியினை வழங்கிவைத்தார்கள். நிலையத்தின் நிருவாகிகள் மற்றும் அனாதைச் சிறார்களின் பொறுப்பாளர்களும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.
Leave a comment