றமழான் கால பாடநெறிகளை பூர்த்திசெய்த மாணவர்களுக்கான பரிசில்கள் வழங்கும் நிகழ்வு

04082013361– இஸ்லாமிய நிலையம்

காத்தான்குடி: காத்தான்குடி இஸ்லாமிக் சென்றர் ஏற்பாட்டில் வருடந்தோறும் றமழான் காலங்களில் மாணவர்களின் நலன் கருதி நடாத்தப்படும் இஸ்லாமிய கற்கை நெறியில் இவ்வருடம் 60 மாணவர்கள் கலந்து கொண்டனர். கற்கை நெறியினைப் பூர்த்தி செய்து இறுதியில் நடாத்தப்பட்ட பரீட்சையில் பங்கு பற்றிய மாணவர்களுக்கான பரிசில்கள் வழங்கும் நிகழ்வு ஜாமிஉத் தௌஹீத் பள்ளிவாயலில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் காத்தான்குடி சுகாதார வைத்திய அதிகாரியும் நிலையத்தின் ஆலோசகர்களில் ஒருவருமான Dr. U. L. நஸுர்தீன் அவர்கள் கலந்து கொண்டு விரிவுரைகளை நடாத்திய உலமாக்களுக்கும் கற்கை நெறியைப் பூர்த்தி செய்த மாணவர்களுக்கும் பரிசில்களை வழங்கிவைத்தார். 

This slideshow requires JavaScript.

Published by

Leave a comment