Author: yourkattankudy.com
-
சூடான் ஜனாதிபதியின் நிலை இலங்கைக்கும் ஏற்படுமா?
லொஸ்ஏஞ்சல்ஸ்: ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச ஐநா பொதுச்சபையில் நிகழ்த்திய உரை குறித்து, அமெரிக்காவின் பிரபலமான லொஸ்ஏஞ்சல்ஸ் ரைம்ஸ் நாளிதழில் ஒரு கட்டுரை வெளியாகியிருந்தது. அந்தக் கட்டுரையில் இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அடுத்தமுறையும் பொதுச்சபைக் கூட்டத்தில் பங்கேற்க வருவாரேயானால் அதிகளவில் அசௌகரியமான வரவேற்பை பெறக்கூடும் என்று குறிப்பிட்டிருந்தார்.
-
இதுவரை உலகத்தில் எந்த ஒரு கிரிக்கெட் வீரரும் படைக்காத புதிய சாதனையில் சச்சின்!
– MJ மும்பை: சச்சின் டெண்டுல்கரின் சாதனைப் புத்தகத்தில் நேற்று மேலும் ஒரு புதிய அத்தியாயம் இடம் பெற்றது. அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளிலும் அவர் 50,000 ஓட்டங்களை நேற்று முன்தினம் கடந்தார். இதுவரை உலகத்தில் எந்த ஒரு கிரிக்கெட் வீரரும் படைக்காத புதிய சாதனை இது.
-
வரலாற்றில் முதல் தடவையாக ஏறாவூர் சவுக்கடி கடலில் 35000 கிலோ பாரை மீன்கள்
ஏறாவூர்: வரலாற்றில் முதல் தடவையாக ஏறாவூர் – சவுக்கடி கடலில் சுமார் 35 ஆயிரம் கிலோ எடையுடைய பாரை மீன்கள் மீனவர்களது கரைவலையில் சிக்கியுள்ளன. ஆறு வலைகளில் பல்லாயிரக் கணக்கான பெறுமதி மிக்க மஞ்சள் பாரை மீன்கள் சிக்கியதையடுத்து பெரும் எண்ணிக்கையிலான பொதுமக்கள் கடற்கரைக்குச் சென்று பார்வையிட்டனர்.
-
இலங்கையின் தென் கடலில் புதிய புவித் தட்டுக்கள்
கொழும்பு: இலங்கையில் அவ்வப்போது உணரப் பட்டு வரும் சிறு சிறு நில அதிர்வுகளுக்கு தென் கடலின் புவித் தட்டில் புதிதாக உருவாகி வரும் நிலத் தட்டே காரணம் என்று அடிப்படைக் கற்கைகளுக்கான நிலையத்தின் பணிப்பாளரும் பேராதனைப் பல்கலைக்கழக புவியியல் துறையின் முன்னாள் பேராசிரியருமான சி. பி. திஸாநாயக்கா நேற்றுத் தெரிவித்தார்.
-
பிறைகண்ட சாட்சிகளின் பிரகாரம் புனித அறபா தினம் இம்மாதம் 14ம் திகதி, திங்கட்கிழமை: சவூதி அரேபியா
– MJ ரியாத்: இஸ்லாத்தின் ஐந்தாவது கடமையான ஹஜ்ஜூக்குரிய புனித அரபா தினம் ஒக்டோபர் 14ம் திகதி திங்கட்கிழமை என சவூதி அரேபியா அறிவித்திருக்கின்றது. இதன்படி துல்ஹஜ் 8ம் நாள் ஞாயிற்றுக்கிழமை மினா, துல்ஹஜ் 9ம் நாள் திங்கட்கிழமை புனித அரபா தினம், துல்ஹஜ் 10ம் நாள் ஈதுல் அல்ஹா-ஹஜ்ஜூப் பெருநாள் எனவும் சவூதி அரேபியா உத்தியோகபூர்வமாக நேற்று அறிவித்துள்ளது.
-
13ஆவது திருத்தத்தை பாதுகாக்க முதலில் நானே குரல் கொடுத்தேன்- விநாயகமூர்த்தி முரளிதரன்
மட்டக்களப்பு: 13ஆவது திருத்தத்தை பாதுகாக்க வேண்டுமென பாராளுமன்றத்தில் முதன் முதலில் நானே குரல் கொடுத்தேன் என மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தார். தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையினால் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள அரசாங்க உத்தியோகத்தர்களுக்குரிய வீடு அமைப்பதற்காக உபகார கொடுப்பனவை வழங்கி வைக்கும் வைபவத்தில்
-
இலங்கையின் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சிக்குள் உட்கட்சி மோதல்
கொழும்பு: ரணில் விக்ரமசிங்கவை கட்சித் தலைமையிலிருந்து நீக்கவேண்டும் என்று, நாட்டின் தெற்கே மாத்தறையிலிருந்து கொழும்பு நோக்கி நேற்று சனிக்கிழமை காலை பேரணியொன்று புறப்பட்டது. அதேநேரம் மாத்தறையிலிருந்து தெவிநுவர விஷ்ணு கோவிலை நோக்கி ரணில் ஆதரவு ஊர்வலமொன்றும் புறப்பட்டது.
-
மட்டக்களப்பு மாவட்ட விளையாட்டு வீரர்களைக் கௌரவித்த – மட்டு பாடுமீன் லயன்ஸ் கழகம்
பழுலுல்லாஹ் பர்ஹான் மட்டக்களப்பு: மட்டக்களப்பு பாடுமீன் லயன்ஸ் கழகத்தினால் தேசிய மட்டத்தில சாதனை படைத்த மட்டக்களப்பு மாவட்ட விளையாட்டு வீரர்களைக் கௌரவிக்கும் நிகழ்வு பாடுமீன் லயன்ஸ் கழகத்தின் தலைவர் ஜெயகரன் தலைமையில் மட்டக்களப்பு கபேகில் ஹோட்டலில் நேற்று மாலை இடம்பெற்றது.
-
பொதுநலவாய நாடுகளின் மாநாட்டை கௌரவிக்கும் வாகனப் பேரணி மட்டக்களப்பு நகரில் இருந்து அம்பாறை நகரை நோக்கிப் பயனம்
பழுளுல்லாஹ் பர்ஹான் மட்டக்களப்பு: கொமன்வெல்த் பொதுநலவாய நாடுகளின் மாநாட்டை கௌரவிக்கும் முகமாக எம்.டீ.வி மற்றும் எம்.பீ.சி ஊடக நிறுவனங்களினால் தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் , ஊடக அமைச்சு என்பவற்றுடன் இணைந்து பருத்தித்துறை முனை முதல் தெய்வேந்திர முனை ஊடாக கொழும்பு நகருக்கான
-
மட்டு-சிறைச்சாலையில் கைதி ஒருவர் சிறைச்சாலையின் கூரை மீதேறி உண்ணாவிரம்
பழுலுல்லாஹ் பர்ஹான் மட்டக்களப்பு: மட்டக்களப்பு சிறைச்சாலையிலுள்ள கைதி ஒருவர் சிறைச்சாலையின் கூரை மீதேறி உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளார். மட்டக்களப்பு, புதூரைச் சேர்ந்த அன்ரன் ஜெயராஜ் (வயது 28) என்ற கைதியே இவ்வாறு கூரை மீதேறி உண்ணாவிரதத்தில் ஈடுபட்டு வருகின்றார்.
-
கோத்தபாய கலமிறங்கலாம்!
கொழும்பு: பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவை மேல் மாகாண சபைத் தேர்தல் மூலம் அரசியலுக்குள் கொண்டுவரத் தீர்மானம் எடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது. அடுத்த வருடம் நடத்தப்பட உள்ள மேல் மாகாண சபைத் தேர்தலில் ஐக்கிய தேசியக்கட்சியின் சார்பில் கரு ஜயசூரிய முதலமைச்சர் வேட்பாளராக நிறுத்தப்பட்டால், கோத்தபா ராஜபக்ஷவை முதலமைச்சர் வேட்பாளராக நிறுத்த ஜனாதிபதி தீர்மானித்துள்ளதாக கூறப்படுகிறது.
-
இரண்டு நாள் அவகாசம் வேண்டும்: ரணில்
கொழும்பு: ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் பதவியில் இருந்து விலகுமாறு அந்த கட்சியின் ஐக்கிய பிக்கு முன்னணி விடுத்த கோரிக்கைக்கு பதிலளித்துள்ள ரணில் விக்ரமசிங்க இரண்டு நாள் காலஅவகாசம் கேட்டுள்ளார். ரணில் விக்ரமசிங்கவுடன் முன்னணி அண்மையில் நடத்திய பேச்சுவார்த்தையின் போது இந்த கோரிக்கையை முன்வைத்ததாக ஐக்கிய பிக்கு முன்னணியின் செயலாளர் சுமங்கள தேரர் தெரிவித்துள்ளார்.