வரலாற்றில் முதல் தடவையாக ஏறாவூர் சவுக்கடி கடலில் 35000 கிலோ பாரை மீன்கள்

fishஏறாவூர்: வரலாற்றில் முதல் தடவையாக ஏறாவூர் – சவுக்கடி கடலில் சுமார் 35 ஆயிரம் கிலோ எடையுடைய பாரை மீன்கள் மீனவர்களது கரைவலையில் சிக்கியுள்ளன. ஆறு வலைகளில் பல்லாயிரக் கணக்கான பெறுமதி மிக்க மஞ்சள் பாரை மீன்கள் சிக்கியதையடுத்து பெரும் எண்ணிக்கையிலான பொதுமக்கள் கடற்கரைக்குச் சென்று பார்வையிட்டனர்.

இந்த மீன்கள் கொழும்பு, கண்டி போன்ற பகுதிகளுக்கு விற்பனைக்காக எடுத்துச் செல்லப்பட்டன.

இம்மீன்கள் தலா 5 அல்லது ஆறு கிலோ கிராம் எடையைக் கொண்டவையாகும்.

கடந்த பல மாத காலமாக அடிக்கடி ஏற்பட்ட காலநிலை மாற்றத்தினால் மீன்டித் தொழில் பாதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் கடற்றொழிலாளர்கள் திடீரென பெரும் எண்ணிக்கையிலான மீன்கள் சிக்கியதனால் மகிழ்ச்சியடைந்து ள்ளனர்.

வரலாற்றில் முதல் தடவையாக ஏறாவூர் – சவுக்கடி கடற்பரப்பில் மிகப்பெரும் எண்ணிக்கையிலான பாரை மீன்கள் சிக்கியதாகத் தெரிவிக்கப்படுகிறது.

fish

– தினகரன்

Published by

Leave a comment