இலங்கையின் தென் கடலில் புதிய புவித் தட்டுக்கள்

sri_lanka[1]கொழும்பு: இலங்கையில் அவ்வப்போது உணரப் பட்டு வரும் சிறு சிறு நில அதிர்வுகளுக்கு தென் கடலின் புவித் தட்டில் புதிதாக உருவாகி வரும் நிலத் தட்டே காரணம் என்று அடிப்படைக் கற்கைகளுக்கான நிலையத்தின் பணிப்பாளரும் பேராதனைப் பல்கலைக்கழக புவியியல் துறையின் முன்னாள் பேராசிரியருமான சி. பி. திஸாநாயக்கா நேற்றுத் தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில் :- இலங்கையின் தென் பகுதி கடலில் 500 – 700 கிலோ மீற்றர்களுக்கு இடைப் பட்ட பகுதியிலுள்ள புவித் தட்டில் புதிய புவித் தட்டொன்று உருவாகி வருகின்றது. அத்தட்டு உருவாகும் புவி தட்டு உறுதியானதல்ல அதனால் அத்தட்டின் ஓரங்களிலும் பூகம்பங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது.

இப்பதிய புவித் தட்டின் உருவாக்கம் இலங்கைக்கு ஆரோக்கியமானதல்ல. இத் தட்டின் உருவாக்கத்தின் விளைவாகவே இப்போது இலங்கையில் சிறு சிறு பூகம்பங்கள் அவ்வப்போது உணரப்படு கின்றன. இப்புவித் தட்டு முழுமையாக வளர்ச்சி அடைவதற்கு பல மில்லியன் கணக்கான வருடங்கள் எடுக்க முடியும். என்றாலும் தற்போது இலங்கையில் உணரப்படுகின்ற சிறு சிறு நில அதிர்வுகளுக்கு இப்புதிய தட்டே காரணம் என்றும் அவர் கூறினார்.

– தினகரன்

Published by

Leave a comment