மட்டக்களப்பு மாவட்ட விளையாட்டு வீரர்களைக் கௌரவித்த – மட்டு பாடுமீன் லயன்ஸ் கழகம்

பழு???????????????????????????????லுல்லாஹ் பர்ஹான்

மட்டக்களப்பு: மட்டக்களப்பு பாடுமீன் லயன்ஸ் கழகத்தினால் தேசிய மட்டத்தில சாதனை படைத்த மட்டக்களப்பு மாவட்ட விளையாட்டு வீரர்களைக் கௌரவிக்கும் நிகழ்வு பாடுமீன் லயன்ஸ் கழகத்தின் தலைவர் ஜெயகரன் தலைமையில் மட்டக்களப்பு கபேகில் ஹோட்டலில் நேற்று மாலை இடம்பெற்றது.

இந் நிகழ்வின் பிரதம விருந்தினராக மட்டக்களப்பு மாவடட அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சாள்ஸ் கலந்துகொண்டார்.

இதன் போது தேசிய மட்டத்தில் பல சாதனைகள் படைத்து இறுதியாக நடந்த 25 ஆவது ‘லங்கா யூத் தேசிய விளையாட்டு விழா மற்றும் 39 ஆவது தேசிய விளையாட்டு மட்டக்களப்பு கபடி ஆண்கள் அணியினர் போட்டி மற்றும் தேசிய மட்டத்தில் சாதனைபடைத்த மட்டக்களப்பு கிறிக்கட் பெண்கள் அணியினர் மல்யுத்த வீரர்கள் அதிதிகளினால் பாராட்டுச் சான்றிதழ் வழங்கி கௌரவிக்கப்பட்டதுடன் மட்டக்களப்பு மாவட்ட செயலக விளையாட்டு உத்தியோகஸ்தர் ரி.ஈஸ்பரனும் கௌரவிக்கப்பட்டார்.

இங்கு மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சாள்ஸின் சிறந்த சேவையினைப் பாராட்டி மட்டக்களப்பு பாடுமீன் லயனஸ் கழகத்தினால் பொன்னாடை போர்த்தி வாழ்த்து மடல் வழங்கிக் கௌரவிக்கும் நிகழ்வும் இடம்பெற்றது.

இந் நிகழ்வில் விருந்தினர்களாக மட்டக்களப்பு மேற்கு கல்வி வலய கல்விப் பணிப்பாளர் கே.பாஸ்கரன் லயன் எம்.மனோகரன்,லயன்,ஜீ.பாஸ்கரன்,லயன் என்.ரஞ்சன் மற்றும் பிரதிக் கல்விப் பணிப்பாளர்களான ஞா. ‘நேசன,எஸ்.மகேந்திரகுமார், வின்சன் மகளீர் தேசிய பாடசாலை அதிபர் திருமதி இராஜகுமாரி கனகசிங்கம் ஆகியோர் கலந்துகொண்டனர். 

This slideshow requires JavaScript.

Published by

Leave a comment