பிறைகண்ட சாட்சிகளின் பிரகாரம் புனித அறபா தினம் இம்மாதம் 14ம் திகதி, திங்கட்கிழமை: சவூதி அரேபியா

Hajj– MJ

ரியாத்: இஸ்லாத்தின் ஐந்தாவது கடமையான ஹஜ்ஜூக்குரிய புனித அரபா தினம் ஒக்டோபர் 14ம் திகதி திங்கட்கிழமை என சவூதி அரேபியா அறிவித்திருக்கின்றது. இதன்படி துல்ஹஜ்  8ம் நாள் ஞாயிற்றுக்கிழமை மினா, துல்ஹஜ் 9ம் நாள் திங்கட்கிழமை புனித அரபா தினம், துல்ஹஜ் 10ம் நாள் ஈதுல் அல்ஹா-ஹஜ்ஜூப் பெருநாள் எனவும் சவூதி அரேபியா உத்தியோகபூர்வமாக நேற்று  அறிவித்துள்ளது.

நேற்று முன் (சனிக்கிழமை) சவூதி அரேபியாவின் பல பாகங்களிலும் துல்ஹஜ் மாதத்துக்கான பிறை தென்பட்டதாகவும், அதன்படி பிறைகண்ட சாட்சிகளின் அடிப்படையில் புனித அரபா தினம் தீர்மானிக்கப்பட்டதாகவும் சவூதி அரேபியா அறிவித்திருக்கின்றது.

இதன்படி ஒக்டோபர் 6ம் திகதி ஞாயிற்றுக்கிழமை துல்ஹஜ் முதலாம் நாளாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

உலகெங்கிலுமுள்ள 2.5 மில்லியன் ஹாஜிகள் அரபாவில் தரிப்பார்கள் எனவும் சவூதி அரேபியா மேலும் அறிவித்துள்ளது.

இதன்பிரகாரம், அமெரிக்கா, பிரித்தானியா, மலேசியா, இந்தோனேஷியா உட்பட பல்வேறு நாடுகளிலும் எதிர்வரும் 14ம் திகதி திங்கட்கிழமை அரபா தினமாகவும், 15ம் திகதி செவ்வாய்க்கிழமை ஈதுல் அல்ஹா ஹஜ்ஜூப் பெருநாள் தினமாகவும் எதிர்பார்க்கப்படுகிறது. 

இம்முறை வழமையைவிடவும், உலகளவில் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் ஹாஜிகள் ஹஜ்ஜூக்கு அனுமதிக்கப்பட்டிருப்பதும், விரைவான, நவீன அளவில் மக்கா ஹரம், கல்லெறிதல் மற்றும் போக்குவரத்து வசதிகள் துரித அளவில் அபிவிருத்தி செய்யப்பட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

Hajj

Published by

Leave a comment