Author: yourkattankudy.com
-
இலவச சட்ட ஆலோசனை வழங்கும் சட்டத்தரணிகள் பொதுமக்கள் சந்திப்பு! – காத்தான்குடியில் நாளை நடைபெறும்
– புவி. எம்.ஐ. றஹ்மதுழ்ழாஹ் காத்தான்குடி: ‘ட்ரான்ஸ்பேரன்சி இன்டர்நெசனல்’ அமைப்பின் மட்டக்களப்பு கிளையினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இலவச சட்ட ஆலோசனை வழங்கும் சட்டத்தரணிகளுக்கும் பொதுமக்களுக்கும் இடையிலான சந்திப்பு ஒன்று நாளை (25.04.2015) சனிக்கிழமை காத்தான்குடியில் இடம்பெறவுள்ளது.
-
‘இஸ்லாத்தின் பார்வையில் ஸஹாபாக்கள்’ எனும் நூலின் 3ம் பதிப்பு நூல் வெளியீட்டு விழா
– பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் ஆதரவுடன் அல் மனார் நிறுவனமும் ஸ்ரீலங்கா ஹிறா பவுண்டேஷனும் இணைந்து நடாத்தும் ‘இஸ்லாத்தின் பார்வையில் ஸஹாபாக்கள்’ எனும் நூலின் 3ம் பதிப்பு நூல் வெளியீட்டு விழா 24-04-2015 இன்று வெள்ளிக்கிழமை காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் மண்டபத்தில் இடம்பெற்றது.
-
“எனது புதிய கட்சி அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஹிஸ்புல்லா அணி”: ஹிஸ்புல்லாஹ் (காணொளி)
– ஓட்டமாவடி அஹமட் இர்ஸாட் காத்தான்குடி: பாராளுமன்ற உறுப்பினர் ஹிஸ்புல்லாஹ்வுடன் நேர் காணல் அஹமட் இர்ஸாட்:- இரண்டரை தசாப்தங்களாக அரசியல் ஜாம்பவானாகவும், அகில இலங்கை ரீதியில் பேசப்படும் வகையில் காத்தான்குடி நகரத்தை மாற்றியமைதுள்ள உங்கள் அரசியல் செல்வாக்கானது அன்மைகாலமாக சரிந்து வருவதாக பலராலும் பலவாறு பேசப்படுகின்றது. இதன் உண்மை நிலை என்ன?
-
“ஐ.எஸ். முஸ்லிம் உலகை அழிக்கும் மோசமான வைரஸ்”: துருக்கி ஜனாதிபதி ரிசப் தையிப்
அங்காரா: இஸ்லாமிய தேசம் (ஐ.எஸ்.) குழு முஸ்லிம் சமூகத்தை அழிக்க செயற்ப டும் வைரஸ் என துருக்கி ஜனாதிபதி ரிசப் தையிப் எர்து கான் கடுமையாக சாடியுள்ளார். ஐ.எஸ்ஸை கட்டுப்படுத்த துருக்கி தனது நாட்டு எல்லையில் போதுமான அளவு செயற்படவில்லை என்று பரவலாக குற்றச்சாட்டு எழும் நிலையில், ஈராக் ஜனாதிபதி புவாத் மசூமை சந்தித்த பின்னர் எர்துகான் இந்த கருத்தை வெளியிட்டிருந்தார்.
-
யெமனில் குண்டுபோட்ட விமானிகளுக்கு சவுதி இளவரசரின் அன்பளிப்புச் செய்தி!!
றியாத்: யெமன் மீது வான் தாக்குதல் நடத்துபவர்களுக்கு ஆடம்பர கார்களை பரிசாக வழங்கும் சவுதி அரேபிய செல்வந்த இளவரசரின் அறிவிப்பால் சமூக தளங்களில் கடும் விமர்சனம் எழுந்துள்ளது.யெமன் மீதான முதல் கட்ட இராணுவ நடவடிக்கையை நிறைவுசெய்ததாக சவுதி அரேபியா கடந்த செவ்வாய்க்கிழமை அறிவித்திருந்தது.
-
255 எம்.பிக்களை தெரிவு செய்யும் கலப்பு தேர்தல் முறைக்கு அமைச்சரவை அங்கீகாரம்
கொழும்பு: தேர்தல் முறை மறுசீரமைப்பிற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. அடுத்த பொதுத் தேர்தலுக்கு முன்னர் 19 ஆவது திருத்தத்துடன் தேர்தல் மறுசீரமைப்பு தொடர்பான 20 ஆவது திருத்தத்தையும் நிறைவேற்ற சகல நடவடிக்கைகளும் எடுக்க இருப்பதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.
-
காத்தான்குடி பூர்வீக நூதனசாலையும் எனது நோக்கும்
– R.இஸ்ஸத்துன்னிஸா, கிழக்கு பல்கலைக்கழகம் காத்தான்குடி: நாடு முழுவதும் பரபரப்பாகப் பேசுபொருளாகியுள்ள காத்தான்குடி பூர்வீக நூதனசாலை பற்றியும், அங்கு வைக்கப்பட்டுள்ள சிலைகள் தொடர்பான கருத்துக்கள் பற்றியும் சிந்திக்கின்றபோது இவ்விடத்தில் இளைய சமூகத்தினரின் உள்ளக்கிடக்கைச் சுட்டிக்காட்டுதல் பொருத்தமாக இருக்கும் என்ற நோக்கில் இந்த ஆக்கம் வரையப்படுகின்றதே தவிர, தனிப்பட்ட முறையில் யாருடைய மனதையும் புண்படுத்தலுக்கோ, சுய இலாபங்களுக்கோ அல்ல என்பதனை ஆரம்பத்திலேயே வலியுறுத்திக் கூறிக் கொள்கின்றேன்.
-
காத்தான்குடி பூர்வீக நூதணசாலையை பார்வையிடும் மாணவா்களோடு பாராளுமன்ற உறுப்பினர் ஹிஸ்புல்லாஹ்
– ஏ.எல்.டீன்பைரூஸ் காத்தான்குடி: காத்தான்குடியில் அமைக்கப்பட்டுள்ள பூர்வீக நூதணசாலையை பார்வையிடும் மாணவா்கள் தொகை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக அதிகாரிகள் நூதனசாலை தெரிவித்தனர் .(23.04.2015 வியாழன்) நூதணசாலையை பார்வையிட வந்த காத்தான்குடி மத்திய மஹா வித்தியாலய(தேசிய பாடசாலை) மாணவர்களுக்கு முஸ்லிம்களின் வரலாறு தொடர்பான விளக்கமளிக்கின்றார் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா.
-
காத்தான்குடி பொலிஸ் நிலையத்தின் மோட்டார் போக்குவரத்து பிரிவினால் விபத்துக்களை தடுக்க பழைய பழுதடைந்த வாகனங்கள் பரிசோதிப்பு
– பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: காத்தான்குடி பொலிஸ் நிலையத்தின் மோட்டார் போக்குவரத்து பிரிவினால் விபத்துக்களை தடுக்க பல்வேறு செயற்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதன் ஒர் அங்கமாக மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள பகுதிகளில் செல்லும் பழைய பழுதடைந்த வாகனங்களை பரிசோதிக்கும் நிகழ்வு 23.04.2015 வியாழக்கிழமை காத்தான்குடி மீரா பலிகா தேசிய பாடசாலைக்கு முன்பாக இடம்பெற்றது.
-
வழங்கிய உறுதிமொழிகளிலிருந்து விலகப் போவதில்லை : ஜனாதிபதி
கொழும்பு: நான் ஜனவரி மாதம் 8 ஆம் திகதி ஆட்சிக்கு வந்த போது நாட்டு மக்களுக்கு சில உறுதி மொழிகளை வழங்கினேன். அந்த உறுதி மொழிகளிலிருந்து ஒரு போதும் விலகப் போவது இல்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.
-
சிறைச்சாலை வைத்தியசாலையிலிருந்த பஷில் தேசிய வைத்தியசாலைக்கு மாற்றம்
கொழும்பு: முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ வெலிக்கடை சிறைச்சாலை வைத்தியசாலையிலிருந்து கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
-
காத்தான்குடியில் புதிய இணையதளம் ஆரம்பம்
காத்தான்குடி நிருபர் காத்தான்குடி: காத்தான்குடி நகரை மையப்படுத்தி இலவசமாக பொருட்களையும் சேவைகளையும் வாங்கவும் விற்கவும் Kattankudy.lk எனும் புதிய இணையத்தளம் ஒன்று இன்று முதல் (24/04/2015) பாவனைக்கு வரும் முறையில் வெளியிடப்பட்டுள்ளது. இச் சேவையை காத்தான்குடி வாழ் மக்களின் தேவை நலன் கருதி இலவசாக வழங்கப்படுகின்றது.