காத்தான்குடி: காத்தான்குடியில் அமைக்கப்பட்டுள்ள பூர்வீக நூதணசாலையை பார்வையிடும் மாணவா்கள் தொகை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக அதிகாரிகள் நூதனசாலை தெரிவித்தனர் .(23.04.2015 வியாழன்) நூதணசாலையை பார்வையிட வந்த காத்தான்குடி மத்திய மஹா வித்தியாலய(தேசிய பாடசாலை) மாணவர்களுக்கு முஸ்லிம்களின் வரலாறு தொடர்பான விளக்கமளிக்கின்றார் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா.
காத்தான்குடியில் அமைக்கப்பட்டுள்ள பூர்வீக நூதணசாலையில் நான்காம் மாடியில் அமைக்கப்பட்டுள்ள வாசிகசாலையில் முஸ்லிம்களின் வரலாறு தொடர்பாக தகவல்கள், அது தொடர்பிலான புத்தகங்கள் அனைத்தும் ஆவணப்படுத்தப்பட்டுள்ளதுடன், அது மாணவர்கள் தொடக்கம் ஏனையவர்களும் அதனை பார்க்க படிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதினை காணக் கூடியதாக உள்ளது.
வரலாறு தொடர்பான விடயங்களை மாணவர்கள் கற்றுக் கொள்வதற்காக தேவையான ஆவணங்களை ,புத்தகங்களை பிரதி எடுத்துக் கொள்ள கூடிய வசதிகள் யாவும் மிக விரைவில் ஏற்படுத்திக் கொடுக்கப்பட உள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா தெரிவித்தார்.
Published by




Leave a comment