வழங்கிய உறுதிமொழிகளிலிருந்து விலகப் போவதில்லை : ஜனாதிபதி

maithiri my3கொழும்பு: நான் ஜனவரி மாதம் 8 ஆம் திகதி ஆட்சிக்கு வந்த போது நாட்டு மக்களுக்கு சில உறுதி மொழிகளை வழங்கினேன். அந்த உறுதி மொழிகளிலிருந்து ஒரு போதும் விலகப் போவது இல்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

விஹாராமகாதேவி பூங்காவிலிருந்து 100 நாள் வேலைத்திட்டம் தொடர்பில் ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சி பிரதிநிதிகள் மத்தியில் உரையாற்றும் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்,

19 ஆவது திருத்தத்திற்கு பாராளுமன்றத்திலுள்ள 225 பேரும் கைதூக்கி ஆதரவு வழங்க வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன்.

நான் ஆட்சிக்கு வந்ததன் பின்பு ஊடகங்கள் மூலம் எனக்கு பார்க்க முடிந்தது பலர் என்னை பற்றி சொன்னார்கள் இவர் இந்த பதவிக்கு பொருத்தம் இல்லாதவர், உற்சாகம் இல்லாத மனிதன் என்று ஆனால் நான் கேட்க விரும்புகிறேன்  ஆட்சிக்கு வருவதற்கு முன்னர் எத்தனை நாடுகள் இலங்கைக்கு ஆதரவு வழங்கியது என்று ஆனால் தற்போது உலகிலுள்ள பெரும்பாலான நாடுகள் இலங்கைக்கு ஆதரவு வழங்கியுள்ளன.

Published by

Leave a comment