றியாத்: யெமன் மீது வான் தாக்குதல் நடத்துபவர்களுக்கு ஆடம்பர கார்களை பரிசாக வழங்கும் சவுதி அரேபிய செல்வந்த இளவரசரின் அறிவிப்பால் சமூக தளங்களில் கடும் விமர்சனம் எழுந்துள்ளது.யெமன் மீதான முதல் கட்ட இராணுவ நடவடிக்கையை நிறைவுசெய்ததாக சவுதி அரேபியா கடந்த செவ்வாய்க்கிழமை அறிவித்திருந்தது.
இந்த இராணுவ நடவடிக்கைக்கு சவுதி அரேபியாவின் மன்னர் குடும்பத்தைச் சேர்ந்தவரும் அந்நாட்டின் மிகப்பெரிய செல்வந்தருமான இளவரசர் அல் வலீத் பின் தலால், 3 மில்லியன் பேர் பின்பற்றும் தனது டுவிட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்திருந்தார்.
இளவரசர் தலால் தனது மனைவி அமீராவுடன்
“இந்த இராணுவ நடவடிக்கையில் அவர்களது பங்கை நான் வரவேற்கிறேன். சவுதியின் 100 (யுத்த விமான) விமானிகளுக்கு 100 பென்ட்லி கார்களை வழங்கவுள்ளேன்” என்று அந்த இளவரசரின் டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இவரது அறிவிப்பை 28,000க்கும் அதிக மானவர்கள் பகிர்ந்துகொண்டிருப்பதோடு 5,000க்கும் மேற்பட்டவர்கள் விருப்பத்தை வெளியிட்டுள்ளனர். எனினும் சவுதிக்கு வெளியில் உள்ளவர்கள், குறிப்பாக யெமன் நாட்டவர்கள் கடும் விமர்சனம் வெளியிட் டுள்ளனர்.
இதில் யெமன் நாட்டவர் ஒருவர் சவுதி இளவரசரின் அறிவிப்பிற்கு கீழால் சவுதி வான் தாக்குதலில் அழிந்த தனது வீட்டின் படத்தை காண்பித்து: “அல் வலீத் சவுதி விமானிகளுக்கு 100 பென்ட்லிக்களை கொடுக்கிறார். அழிக்கப்பட்ட வீடுதான் எனக்கு கிடைத்தது. இப்போது கூட அந்த அனைத்து விமானிகளை விடவும் எனது ஆன்மா உறுதியாகவே இருக்கிறது என்பதை என்னால் போட்டியிட்டு கூற முடியும்” என்று குறிப்பிட்டுள்ளார்.
இளவரசர் தலாலின் டுவிட்டர் பக்க அறிவிப்பு அறபியில்
கடும் விமர்சனத்தை அடுத்து இந்த பரிசு வழங்கும் டுவிட் அகற்றப்பட்டுள்ளது. இளவரசர் அல் வலீத்தின் டுவீட்டர் பக்கம் ஹக் செய்யப்பட்டிருப்பதாக ஒருசில சவுதி ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.
மன்னர் அல் வலீத்தின் ஆடம்பர வாழ்வு குறித்து ஏற்கனவே கடும் விமர்சனம் உள்ளது. இதற்கு முன்னர் அவர் “சவுதி சாம்பியன்சிப்” போட்டியில் வென்ற கால்பந்து கழக அணிக்கு 25 கார்களை பரிசாக கொடுத்து சர்ச்சையை ஏற்படுத்தினார். SHM
Leave a comment