காத்தான்குடி: காத்தான்குடி நகரை மையப்படுத்தி இலவசமாக பொருட்களையும் சேவைகளையும் வாங்கவும் விற்கவும் Kattankudy.lk எனும் புதிய இணையத்தளம் ஒன்று இன்று முதல் (24/04/2015) பாவனைக்கு வரும் முறையில் வெளியிடப்பட்டுள்ளது. இச் சேவையை காத்தான்குடி வாழ் மக்களின் தேவை நலன் கருதி இலவசாக வழங்கப்படுகின்றது.
இலங்கையின் மிகப்பெரிய Online சந்தைகளில் உள்ள அனைத்து அம்சம்களையும் இவ் இணையத்தளம் கொண்டுள்ளதுடன் இதற்கென்று தனித்துவமான சில பயன்களையும் கொண்டுள்ளது. காத்தான்குடி மக்கள் இதன் பயனை முழுமையாக பெற வேண்டும் என்ற நோக்கத்திற்காக காத்தான்குடி நகரிட்குள் மட்டுப் படுத்தப்பட்டுள்ள இச் சேவையினால் வேறு ஒன்லைன் சந்தைகளில் உள்ளது போன்று வாங்குபவரின், விற்பவரின் அமைவிட சிக்கல்கள் ஏற்படாது.
ஒரு கணக்கை இலவசமாக Kattankudy.lk இணையத்தளத்தில் உருவாக்கிக் கொள்வதன் மூலம் விளம்பரங்களை காத்தான்குடி முழுவதும் காட்சிப் படுத்த முடியும். ஆனால் அதே சமயம் எந்த கணக்குகளும் உருவாக்கிக் கொள்ளாமலும் ஒரு விளம்பரத்தை பார்வையிட முடியும்.
இது 12 பிரதான விளம்பர வகைகளும் அதன் கீழ் அமைந்த 78 உப விளம்பர வகைகளும் விளம்பரத்தை தேடும் ஒருவருக்கு சிரமமின்றி அவருக்குரிய இடத்திற்கு அழைத்துச் செல்ல உதவி செய்கின்றன.
Published by

Leave a comment