‘இஸ்லாத்தின் பார்வையில் ஸஹாபாக்கள்’ எனும் நூலின் 3ம் பதிப்பு நூல் வெளியீட்டு விழா

hizbullah– பழுலுல்லாஹ் பர்ஹான்

காத்தான்குடி: முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் ஆதரவுடன் அல் மனார் நிறுவனமும் ஸ்ரீலங்கா ஹிறா பவுண்டேஷனும் இணைந்து நடாத்தும் ‘இஸ்லாத்தின் பார்வையில் ஸஹாபாக்கள்’ எனும் நூலின் 3ம் பதிப்பு நூல் வெளியீட்டு விழா 24-04-2015 இன்று வெள்ளிக்கிழமை காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் மண்டபத்தில் இடம்பெற்றது.

அல்-மனார் நிறுவனத்தின் செயலாளர் நாயகம் அஷ்ஷெய்க் ஏ.எல்.எம்.மும்தாஸ் (மதனி) தலைமையில் இடம்பெற்ற இந் நூல் வெளியீட்டு விழாவில் பிரதம அதிதியாக ஸ்ரீலங்கா ஹிறா பவுண்டேஷன் நிறுவனத்தின் தலைவரும்,பாராளுமன்ற உறுப்பினருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் கலந்து கொண்டதோடு விஷேட அதிதியாக மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தின் வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.ஐ.சேகு அலி கலந்து கொண்டார்.

hizbullah

இதன் போது ‘இஸ்லாத்தின் பார்வையில் ஸஹாபாக்கள்’ எனும் நூலின் 3ம் பதிப்பின் முதற் பிரதி ஸ்ரீலங்கா ஹிறா பவுண்டேஷன் நிறுவனத்தின் தலைவர் ஹிஸ்புல்லாஹ்வினால் மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தின் வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.ஐ.சேகு அலிக்கு வழங்கி வைக்கப்பட்டது.

இங்கு நூல் ஆய்வுரையை அஷ்ஷெய்க் ஏ.எல்.பீர் முஹம்மத் காஷிமி நிகழ்த்தினார்.

hizbullah (2)

இந்நிகழ்வில் காத்தான்குடி நகர சபைத் தவிசாளர் எஸ்.எச்.எம்.அஸ்பர், பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளனத்தின் தலைவர் எம்.ஐ.எம்.சுபைர் ஜேபி ,காத்தான்குடி ஜம்இய்யதுல் உலமாவின் தலைவர் மௌலவி ஏ.எம்.அப்துல் காதர் (பலாஹி), ‘இஸ்லாத்தின் பார்வையில் ஸஹாபாக்கள்’ எனும் நூலின் நூலாசிரியர் அஷ்ஷெய்க் எம்.பீ.எம்.இஸ்மாயில் (மதனி) உட்பட உலமாக்கள் ,ஊர் பிரமுகர்கள்,கல்வியலாளர்கள், அல் மனார் நிறுவனத்தின் நிருவாகிகள்,பாடசாலை மாணவ ,மாணவிகள் என பலரும் கலந்து கொண்டனர்.

Published by

Leave a comment