குருநாகல்: சவுதி மன்னரால் இலங்கை ஏழைகளுக்காக வழங்கப்பட்ட இலவச வீசாவில் உம்ரா சென்றதே ரிஸ்வி ஜவகர்சாவின் பெயர் வேட்பு மனுவிலிருந்து நீக்கப்பட்டதற்கான உண்மைக் காரணம் என நம்பகரமாக தெரியவருகின்றது.
குருநாகல் மாவட்ட முஸ்லிம்கள் ரிஸ்வி ஜவகர்சாவை வேட்பாளராக நியமிக்கப்படுவதற்கு அகிலவிராஜ் காரியவசத்திடம் தமது கடும் எதிர்ப்பினை இது தொடர்பில் வெளிப்படுத்தியுள்ளனர். இதன்பிற்பாடே அவரது பெயர் நீக்கப்பட்டுள்ளது.
முகாவின் மாகாண சபை உறுப்பினரான ரிஸ்வி ஜவகர்சாவின் பெயர் ஐதேகவின் வேட்பு மனுவிலிருந்து நீக்கப்பட்டமைக்கு காரணம் அமைச்சர் ரிசாதின் தலையீடே என கடந்த சில தினங்களாக குற்றம் சுமத்தி வருகின்றார்.
இது தொடர்பிலான உண்மைத் தன்மையை அறிய முற்பட்ட போதே மேற்படி தகவல்கள் தெரிய வந்துள்ளது.
ரிஸ்வி ஜவகர்சாவின் பெயர் வேட்பு மனுவிலிருந்து நீக்கப்படுவதற்கு ஒரு சில நிமிடங்களுக்கு முன்னர் முகா தலைவர் ரவூப் ஹக்கீமுக்கும் இவரது பெயர் நீக்கப் படுவது தொடர்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் ஏழைகளுக்கான உம்ரா வீசாவில் பயணம் செய்தமையும் அந்த விடயம் முஸ்லிம் சமுகத்தின் மத்தியில் பாரிய விமர்சனத்தை தோற்றுவித்துள்ளது என்பது குறித்தும் முகா உயர் தரப்பினர்களுக்கு விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
குருநாகல் மாவட்டத்தி;ல் மகிந்த ராஜபக்ச களமிறங்கியிருக்கும் இன்றைய சூழ்நிலையில் ஐதேக வின் வெற்றி வாய்ப்பை உறுதிப்படுத்த முஸ்லிம்களின் வாக்குகள் கட்டாயம் என்று உணரப்பட்ட வேளையில் தான் ரிசாத் பதியுதீனால் பிரேரிக்கப்பட்ட அவரது கட்சி சார்ந்த டாக்டர் சாபி உள்வாங்கப்பட்டார் என்றும் குருநாகல் மாவட்ட ஐதேக தரப்பிலிருந்து தெரியவருகின்றது.
குருநாகல் மாவட்ட முஸ்லிம்கள் ஒன்றுபடும் பட்சத்தில் அம்மாவட்டத்தில் முஸ்லிம் பிரதிந்துவம் என்பது தற்போதைய களநிலவரத்தின் படி நிச்சயிக்கப்பட்ட ஒன்றாக உருவாகியுள்ளது.
முகா வேட்பாளரின் பெயர் நீக்கப்பட்டதையடுத்து குருநாகல் மாவட்ட முஸ்லிம்கள் ஜேவிபி பக்கம் சாய்வதாக வெளியான செய்தியில் எவ்வித உண்மையும் இல்லை என்றும் குருநாகல் மாவட்ட முஸ்லிம்கள் ஐதேகவுக்கும் அதில் போட்டியிடும் ஒரே ஒரு முஸ்லிம் வேட்பாளரான டொக்டர் சாபிக்குமே வாக்களிக்கவுள்ளனர் என்றும் அறிய முடிகின்றது
Published by

Leave a comment