நபி (ஸல்) அவர்களது காலத்திலேயே எழுதப்பட்ட அல்குர்ஆன் பிரதி இங்கிலாந்தில் கண்டெடுப்பு

quran yourkattankudy imageலண்டன்: புனித மறையான அல் குர்ஆனின் ஆகப் பழைய எழுத்துப் பிரதியின் சில பக்கங்கள் தமது ஆவணத் தொகுப்பில் இருந்தது தெரியவந்திருப்பதாக பிரிட்டிஷ் பல்கலைக்கழகம் ஒன்றின் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

இந்த எழுத்துப் பிரதியை கார்பன் டேட்டின் முறையில் பரிசோதித்தபோது அவை ஏழாம் நூற்றாண்டைச் சேர்ந்தவை எனத் தெரியவருகிறது.

இந்தப் பிரதியை எழுதியவர் இறைதூதர் முகம்மது நபி (ஸல்) அவர்களைக் கண்டும் கேட்டும் இருந்த ஒருவராக இருந்திருப்பார் என பேர்மிங்ஹம் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

quran yourkattankudy image

ஈராக்கில் பிறந்த சரித்திர ஆர்வலரான அல்ஃபோன்ஸ் மிங்கானா என்பவரால் 1920கள் காலகட்டத்தில் இந்த குரான் எழுத்துப் பிரதியின் பக்கங்கள் பேர்மிங்ஹாமுக்கு கொண்டுவரப்பட்டிருந்தன. இக்குர்ஆன் எழுத்துக்கள் ஆட்டின் அல்லது செம்மறி ஆட்டின் தோலின் மேல் எழுதப்பட்டிருப்பதும், கிபி. 568 இற்கும் கி.பி. 645 இற்கும் இடைப்பட்ட காலத்தில் எழுதப்பட்டுள்ளதும் தற்போதய ஆய்வில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.SHM

Published by

Leave a comment