Author: yourkattankudy.com
-
கல்வி மற்றும் சமூகத்திற்கான ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இரத்ததான நிகழ்வு
– பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் இரத்த வங்கியில் நிலவும் இரத்தப் பற்றாக்குறையை கருத்திற் கொண்டு மட்டக்களப்பு மாவட்டத்தில் காத்தான்குடி பிரதேச செயலாளர் பிரிவில் இயங்கிவரும் (யூஸ்) கல்வி மற்றும் சமூகத்திற்கான ஒன்றியத்தின் ஏற்பாட்டில் “உயிர் காக்கும் மனிதாபிமான நடவடிக்கைகளுக்கு உதவுங்கள் ” எனும் தொனிப்பொருளில் மனித நேயம் பேணும் 2வது மாபெரும் இரத்ததான முகாம் 26-09-2015சனிக்கிழமை காத்தான்குடி-05 மட்-அல்ஹிறா மகா வித்தியாலயத்தில் இடம்பெற்றது.
-
அப்றார் பாலர் பாடசாலையின் வருடாந்த விளையாட்டு விழா
எம்.ஐ.அப்துல் நஸார் காத்தான்குடி: புதிய காத்தான்குடி அப்றார் பாலர் பாடசாலையின் 15ஆவது வருடாந்த விளையாட்டு விழா கடந்த 2015.09.27ஆந் திகதி ஞாயிற்றுக்கிழமை அப்றார் பாலர் பாடசாலை மைதானத்தில் நடைபெற்றது.
-
சட்டக் கல்லூரி அனுமதியில் தமிழ் – முஸ்லிம் பரீட்சார்த்திகளுக்கு மீண்டும் மீண்டும் அநீதி!
கொழும்பு: சட்டக் கல்லூரி அனுமதி – 2016 கல்வியாண்டுக்கான போட்டிப் பரீட்சையில் தமிழ்மொழி மூல பரீட்சார்த்திகளில் கணிசமான தொகையினருக்கு அப்பட்டமாக அநீதி இழைக்கப்பட்டு உள்ளது.
-
குழந்தையொன்றுக்கு காயமேற்பட்டதால் தரையிறக்கப்பட்ட விமானம்
லங்காதீப – தமிழாக்கம் : எம்.ஐ.அப்துல் நஸார் ஜகர்தா: ஜகர்தாவிலிருந்து சவூதி அரேபியா நோக்கி பறந்துகொண்டிருந்த இந்திய விமானமொன்றினுள் மூன்று வயது குழந்தையொன்றுக்கு விமானத்தினுள் தரையில் விழுந்ததனால் தலையில் காயங்கள் ஏற்பட்டன. அந்தக் காயங்களுக்கு சிகிச்சையளிப்பதற்காக குறித்த விமானம் நேற்றைய தினம் (27) மாலை கட்டுநாயக்க விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.
-
தற்பொழுது நள்ளிரவைத் தாண்டும் இலங்கையில் மின்சாரத் தடை
இலங்கை முழுவதும் தற்பொழுது மின்சாரம் தடைப்பட்டிருக்கிறது. இதற்கான காரணம் உத்தியோகபூர்வடாகத் தெரியவில்லை.
-
30 வருடங்களின் பின்னர் நிகழும் அரிதான சந்திர கிரகணம் இன்று
கொழும்பு: மிகவும் அரிதான சந்திர கிரகணம் ஒன்று இன்று ஏற்படவுள்ளதாக வானியல் விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். 30 வருடங்களுக்குப் பின்னர் இப்படியான சந்திர கிரகணம் ஒன்று ஏற்படவுள்ளதாக நாஸா நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த சந்திர கிரகணம் இலங்கையர்களும் காணக்கூடியதாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மிகவும் பிரகாஷமான மற்றும் மிகப் பெரிதாக சந்திரன் தென்பட்ட பின்னரே இந்த சந்திர கிரகணம் நிகழவுள்ளது.
-
பொலீஸார் யாரிடமும் மன்னிப்புக் கோரவேண்டிய அவசியமில்லை
லங்காதீப – தமிழாக்கம் : எம்.ஐ.அப்துல் நஸார் கொழும்பு: சிறுமி சேயா சதெவ்மி கொலை சம்பந்தமாக முன்னர் சந்தேகத்தின் பேரில் மேற்கொள்ளப்பட்ட கைதானது சம்பவம் நடைபெற்ற இடம், சூழல், வீடுகளில் காணக்கூடியதாக இருந்த மற்றும் கேட்கக் கூடியதாக இருந்த தகவல்களின் அடிப்படையில் எழுந்த நியாயமான சந்தேகத்தின் பேரிலேயே மேற்கொள்ளப்பட்டதாக மேல் மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலீஸ்மா அதிபர் பூஜித ஜயசுந்தர தெரிவித்தார்.
-
உவைசின் மனைவி ருஸ்தாவை திருமணம் செய்ய நான் தயார்: அசாத் சாலி
கொழும்பு: உவைசின் மனைவி என்னை திருமணம் செய்ய விரும்பினால் நானும் திருமணம் செய்ய விருப்பம் தெரிவிப்பதாக மத்திய மாகாண சபை உறுப்பினர் அசாத் சாலி தெரிவித்துள்ளார். நேற்று ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்ட சந்தர்ப்பத்திலே இதனை தெரிவித்துள்ளார். மத்திய மாகாண சபையின் உறுப்பினர் எ.எல்.எம். உவைஸின் மனைவி ருஸ்தாவை மத்திய மாகாண சபையின் உறுப்பினரும், தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவருமான அசாத் சாலி அழைத்துச் சென்று வாழ்க்கை நடாத்தி வருவதாக குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.
-
சேயாவைக் கடத்த ஒருவருடம் காத்திருந்த கொலையாளி!
கம்பஹா: கொட்டதெனியாவில் படுகொலை செய்யப்பட்ட சிறுமி சேயாவைக் கடத்திச் சென்று தனது இச்சைகளைப் பூர்த்தி செய்து கொள்வதற்காக ஒருவருடகாலமாக காத்திருந்ததாக கொலையாளி தெரிவித்துள்ளார். சிறுமி சேயாவின் கொலை தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள முக்கிய குற்றவாளியான கொண்டயா என்றழைக்கப்படுவரிடம் நேற்று பொலிசார் மேற்கொண்ட விசாரணைகளின் போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
-
ஹஜ் விபத்துக்களும் பொறுப்புவாய்ந்த சவுதி அரசாங்கமும்
– MJ மக்கா: கடந்த காலங்களைவிடவும் இம்முறை ஹஜ் காலத்தில் ஏற்பட்ட உயிரிழப்புக்கள் எங்களுக்கு தாங்கிக்கொள்ள முடியாதநிலையை விடவும், ஆழ்ந்த சோகத்தில் இருக்கிறது சவுதி அரசாங்கம். ஓர் ஹஜ்ஜிற்கான ஏற்பாடுகள் குறைந்தது 10 மாதங்களுக்கு முன்னர் இருந்தே மிக நுணுக்கமாக சவுதி அரசாங்கம் திட்டமிட்டு வடிவமைக்கின்றது.
-
மடக்கப் பார்த்த ரங்காவை முடக்கிப் போட்ட டக்ளஸ்! (காணொளி)
கொழும்பு: ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் கே. என். டக்ளஸ் தேவானந்தா, சக்தி ரி. வியின் மின்னல் நேரலை நிகழ்ச்சியில் கடந்த வாரம் பங்கேற்று கலக்கினார். இவரை ஸ்ரீரங்கா பல வழிகளிலும் கேள்விக் கணைகளால் மடக்கப் பார்த்தார். ஆயினும் ஸ்ரீரங்காவை சமயோசித பதில்களை கொடுத்து மடக்கினார் டக்ளஸ்.