சேயாவைக் கடத்த ஒருவருடம் காத்திருந்த கொலையாளி!

child gambaha cheyaகம்பஹா: கொட்டதெனியாவில் படுகொலை செய்யப்பட்ட சிறுமி சேயாவைக் கடத்திச் சென்று தனது இச்சைகளைப் பூர்த்தி செய்து கொள்வதற்காக ஒருவருடகாலமாக காத்திருந்ததாக கொலையாளி தெரிவித்துள்ளார். சிறுமி சேயாவின் கொலை தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள முக்கிய குற்றவாளியான கொண்டயா என்றழைக்கப்படுவரிடம் நேற்று பொலிசார் மேற்கொண்ட விசாரணைகளின் போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

தனது வாலிப வயதில் பல யுவதிகளுடன் காதல் தொடர்பை ஏற்படுத்திக் கொள்ள முயன்று தோற்றுப் போன நிலையில் அழகான சிறுமிகள் மீது தனது நாட்டம் திரும்பியதாக அவர் குறிப்பிட்டுள்ளார். அந்த வகையில் சிறுமி சேயா மீது கடந்த ஒரு வருடகாலமாக கண் வைத்துக் காத்திருந்ததாகவும், பல தடவைகள் அவரைக் கடத்தும் முயற்சிகள் தோல்வியடைந்த நிலையில் அன்று எதிர்பாராதவிதமாக அவரைக் கடத்திச் செல்லும் வாய்ப்புக் கிடைத்ததாகவும் கொலையாளி குறிப்பிட்டுள்ளார்.

மேலும் சிறுமி சேயா கத்தினால் சப்தம் கேட்டு அயலவர்கள் எழுந்து விடுவார்கள் என்ற அச்சத்தினால் முதலில் அவளைக் கொலை செய்துவிட்டு அதன் பிறகே நீண்ட நேரம் அவளைத் துஷ்பிரயோகம் செய்ததாகவும் கொலையாளி தகவல் தெரிவித்துள்ளார். சந்தேக நபரிடம் இன்றும் முழுமையான விசாரணை மேற்கொள்ளப்பட்ட பின்னர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி விளக்கமறியலுக்கு அனுப்பவுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

கொட்டதெனியாவ பிரதேசத்தில் சேயா என்ற சிறுமியை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தி கொலை செய்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட கொண்டயா என்றழைக்கப்படும் சந்தேக நபர் மன நோயாளி அல்ல என வைத்திய பரிசோதனையின் போது தெரியவந்துள்ளது.

நீர்கொழும்பு மாவட்ட வைத்தியசாலையில் நேற்று இவ் வைத்திய பரிசோதனை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். எப்படியிருப்பினும் மேலதிக பரிசோதனைக்காக சந்தேக நபர் இன்று நீர்கொழும்பு சட்ட வைத்திய அதிகாரியிடம் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக பொலிஸ் தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.

சேயா குழந்தை கடந்த 11ஆம் திகதி இரவு காணாமல் போய் அவரது சடலம் 13ஆம் திகதி வீட்டிற்கு அருகில் உள்ள கால்வாயில் இருந்து மீட்கப்பட்டது. இக் கொலை தொடர்பில் சந்தேகத்தின் பேரில் 17வயதுடைய பாடசாலை மாணவர் ஒருவரும், 33 வயதுடைய நபர் ஒருவரும் கைது செய்யப்பட்டனர். நேற்று முன் தினம் அதிகாலை கொண்டயா என்பவர் கம்பஹா, பெம்முல்ல என்ற பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டாரர், அவரிடமிருந்து வாக்குமூலமும் பெற்றுகொள்ளப்பட்டுள்ளது.

Published by

Leave a comment