Author: yourkattankudy.com
-
மினாவில் பலியானவர்கள் விபரம்
– MJ மினா: நேற்று மினா ஜம்ரா வழியில் இடம்பெற்ற சனநெரிசல் விபத்தில் கொல்லப்பட்ட 700 பேருக்கும் அதிகமானோரில் 131 ஈரானியர்களும், 87 மொரக்கோ நாட்டினரும், இந்தியர் 14, பாகிஸ்தான் 7, இந்தோனேசியா 3 மற்றும் நெதர்லாந்து ஒருவர் என அடையாளம் காணப்பட்டிருப்பதாக சவுதி ஊடகங்கள் தெரிவிக்கின்றன. மேலும் இரு பிலிப்பைன்ஸ் நாட்டவர்கள் வெப்ப அதிர்ச்சியில் பலியாகி இருப்பதாகவும் அங்குள்ள செய்திகள் தெரிவிக்கின்றன.
-
சட்டக் கல்லூரிப் பரீட்சார்த்திகளுக்கு முன்னாள் அமைச்சர் ஹசன் அலி வாழ்த்து!
கொழும்பு: நாளை சனிக்கிழமை இலங்கை சட்டக் கல்லூரி அனுமதிக்கான நுழைவுப் பரீட்சை கொழும்பில் இடம்பெறுகின்றது. இதில் எழுதுகின்ற தமிழ்மொழி மூல பரீட்சார்த்திகள் அனைவருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்து உள்ளார் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் செயலாளர் நாயகமும், சுகாதார துறை முன்னாள் இராஜாங்க அமைச்சருமான ஹசன் அலி.
-
காத்தான்குடி சமூக மதிப்பீட்டுக்கான அமைப்பின் உழுஹிய்யா விநியோக நிகழ்வு
பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: காத்தான்குடி சமூக மதிப்பீட்டுக்கான அமைப்பு கடந்த ஐந்து வருடங்களாக வருடந்தோரும் நடாத்தி வருகின்ற உழுஹிய்யா விநியோக நிகழ்வு இன்று 25-09-2015 வெள்ளிக்கிழமை சமூக மதிப்பீட்டுக்கான அமைப்பின் தலைவரின் இல்லத்தில் இடம்பெற்றது. இதன் போது விஷேட தேவையுடையோர்,இளம் விதவைகள்,மற்றும் வறியவர்கள் என்று 250க்கும் மேற்பட்டவர்களை மிகத்துல்லியமாக மதிப்பீடு செய்து பயனாளிகளுக்கு சமைக்கும் உணவுப் பொதிகள் சமூக மதிப்பீட்டுக்கான அமைப்பினது தலைவர் இல்மி அஹமட்லெவ்வையினால் வழங்கி வைக்கப்பட்டது.
-
இன்னும் சில நாட்கள்… செய்தித் தாளின் மரண அறிவிப்பில் எனது புகைப்படம்
– எம்.ரீ.எம். பாரிஸ் காலை நேரம்., அலுவலகத்திற்கு கிளம்பியாக வேண்டும் நான். செய்தித் தாளை எடுத்துப் பார்க்கிறேன்,மரண அறிவிப்பில் எனது புகைப்படம். அய்யோ….
-
இரத்தப் பற்றாக்குறையை கருத்தில் கொண்டு (யூஸ்) கல்வி மற்றும் சமூகத்திற்கான ஒன்றியம் ஏற்பாடு செய்துள்ள 2வது மாபெரும் இரத்ததான முகாம் நாளை காத்தான்குடியில்
பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் இரத்த வங்கியில் நிலவும் இரத்தப் பற்றாக்குறையை கருத்தில் கொண்டு “உயிர் காக்கும் மனிதாபிமான நடவடிக்கைகளுக்கு உதவுங்கள் ”எனும் தொனிப்பொருளில் (யூஸ்) காத்தான்குடி கல்வி மற்றும் சமூகத்திற்கான ஒன்றியம் ஏற்பாடு செய்துள்ள 2வது மாபெரும் இரத்ததான முகாம் 26-09-2015 நாளை சனிக்கிழமை காலை 8.30 மணி தொடக்கம் மதியம் 1.00 மணிவரை காத்தான்குடி-05 மட்-அல்ஹிறா மகா வித்தியாலயத்தில் இடம்பெறவுள்ளது.
-
கழிவு டயர்களை அரைத்து பவுடராக்கும் தொழிற்சாலை நிந்தவூரில் திறந்து வைக்கப்பட்டது
ஹாசிப் யாஸீன் நிந்தவூர்: உள்நாட்டு, வெளிநாட்டு முதலீட்டாளர்களை ஊக்குவிக்கும் அரசின் வேலைத்திட்டத்தின் கீழ் அபியா குறூப் நிறுவனத்தினால் கழிவு டயர்களை அரைத்து பவுடராக்கும் தொழிற்சாலை நேற்று வியாழக்கிழமை (24) நிந்தவூரில் திறந்து வைக்கப்பட்டது. இத்தொழிற்சாலையினை திறந்து வைக்கும் நிகழ்வில் விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் பிரதம அதிதியாக கலந்து கொண்டு திறந்து வைத்தார்.
-
காத்தான்குடியில் 90 நோயளர்களை இரு தினங்களில் குணப்படுத்தினார் டாக்டர். ஹப்ஸா மபாஸ்
புவி. எம்.ஐ. றஹ்மதுழ்ழாஹ் காத்தான்குடி: கொழும்பு, வெல்லம்பிட்டியவைச் சேர்ந்த இளம் நரம்பியல் டாக்டர். ஹப்ஸா மஹாஸ் (D.H.M, B.F.M, M.T) அவர்கள், ஓர் நோயாளிக்கு சிகிச்சையளிக்கும் நோக்குடன் கடந்த 20ம் திகதி ஞாயிற்றுக்கிழமை மாலை காத்தான்குடிக்கு வருகை தந்தார். காத்தான்குடி ‘சலாகா’ விருந்தினர் விடுதியில் தங்கியிருந்த டாக்டரிடம் அந்நோயாளியை அவரது உறவினர்கள் மிகுந்த சிரமத்துடன் கைத்தாங்கலாக அழைத்து வந்தனர். அவரது நிலைமையை அவதானித்த டாக்டர் ஹப்ஸா, அவருக்கு சிகிச்சையளித்து அன்றைய தினமே அவரைக் குணப்படுத்தினார்.
-
பெருநாள் திடலில் தேசிய தவ்ஹீத் ஜமாஅத் தனித்துத் தொழுதது ஏன்?
தேசிய தவ்ஹீத் ஜமாஅத் உலமாக்கள் குழு இஸ்லாத்தின் மூலாதாரம் திருக்குர்ஆன் மற்றும் ஆதாரபூர்வமான ஹதீஸ்கள் மாத்திரம் தான் என்பதை நாம் அழுத்தம் திருத்தமாகச் சொல்லி வருகிறோம். ‘ஒரு காரியம் இஸ்லாத்தில் இருப்பதாக எமக்கு நிரூபணமாகி விட்டால் அதைச் செயற்படுத்துவதில் விட்டுக் கொடுப்பதோ, சமரசம் செய்து கொள்ளவதோ கூடாது’ எனும் கொள்கையில் நாம் உறுதியாக உள்ளோம்.
-
தாருல் அதர் அத்தஅவிய்யாவின் ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை
பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: தாருல் அதர் அத்தஅவிய்யாவின் ஏற்பாட்டில் இன்று காத்தான்குடி கடற்கரையில் (ஆ.ம.ஹாஜியார் வளவிற்கு முன்பாக) ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகையும் குத்பாவும் இடம்பெற்றது. குத்பா பிரசங்கத்தினை பிரபல தென்னிந்திய இஸ்லாமிய மார்க்கப் பிரச்சாரகர் கோவை எஸ். அய்யூப் நிகழ்த்தினார்.
-
மினா நெரிசல்: பலியானோரின் எண்ணிக்கை 750! 800 பேர் காயம்!!
– AF-90 மினா: மினாவில் இன்று கல்லெறியும் நெரிசலில் ஏற்பட்ட விபத்தில் இதுவரைக்கும் 750 பேர்வரை பலியாகி இருப்பதாகவும், 800 பேருக்கு மேல் காயப்பட்டிருப்பதாகவும் சம்வத்தில் ஈடுபடும் சவுதி ஊடகங்கள் தெரிவித்திருக்கின்றன. பலியோனோரின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.
-
நாளை யூசுப் முப்தியின் ஜும்ஆ பயான் காத்தான்குடி மெத்தைப் பள்ளிவாயலில்
ஆஸிர் நஸீர் காத்தான்குடி: அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் உப தலைவரும், ஸம் ஸம் நிறுவனத்தின் பணிப்பாளருமான அஷ் ஷெய்க் முப்தி யூசுப் ஹனீபா (பின்னூரி) அவர்களால் “இப்ராஹீம் (அலை) காட்டித்தந்த குடும்ப வாழ்வு” எனும் தலைப்பில் இன்ஷா அல்லாஹ் நாளை (25.09.2015) வெள்ளிக்கிழமை காத்தான்குடி – 03 முஹைதீன் மெத்தைப் பெரிய ஜும்ஆப் பள்ளிவாயலில் ஜும்ஆ பயான் நடைபெறவுள்ளது.
-
காத்தான்குடி இஸ்லாமிக் சென்றர் ஏற்பாடு செய்த ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை
பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: உலக முஸ்லிம்களின் இரு பெருநாள் தினங்களில் தியாகத்தை வழியுறுத்தும் பெருநாள் தினமான புனித ஈதுல் அழ்ஹா ஹஜ்ஜூப் பெருநாளை உலக முஸ்லிம்கள் இன்று வியாழக்கிழமை கொண்டி வருகின்றனர்.