- எம்.ஐ.அப்துல் நஸார்
காத்தான்குடி: புதிய காத்தான்குடி அப்றார் பாலர் பாடசாலையின் 15ஆவது வருடாந்த விளையாட்டு விழா கடந்த 2015.09.27ஆந் திகதி ஞாயிற்றுக்கிழமை அப்றார் பாலர் பாடசாலை மைதானத்தில் நடைபெற்றது.
எம்.என்.ஆர் பவுண்டேஷன் நிறுவனத்தின் தவிசாளர் என்.பீ.எம்.முஸ்தபா (தாஹிர்) தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வுக்கு கௌரவ அதிதியாக புதிய காத்தான்குடி அன்வர் வித்தியாலய அதிபர் எம்.ஏ.சீ.எம்.நியாஸ் அவர்களும் விஷேட அதிதியாக சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் மர்சுகா றபீக் அவர்களும் கலந்துகொண்டிருந்தனர்.
நிகழ்வின் இடைநடுவில் மழை குறுக்கிட்ட போதிலும், மழை நின்றவுடன் நிகழ்ச்சிகள் தொடர்ந்து இடம்பெற்றன. இதற்கு முயற்சித்த அத்தனை நிருவாகிகளுக்கும் பொதுமக்களும் நலன்விரும்பிகளும் பாராட்டினை தெரிவித்தனர்.
நியூ சொய்ஸ் பார்க் மற்றும் எம்.என்.ஆர் பவுண்டேஷன் நிறுவனங்களின் அனுசரணையுடன் நடைபெற்ற புதிய காத்தான்குடி அப்றார் பாலர் பாடசாலையின் 15ஆவது வருடாந்த விளையாட்டு விழாவின் நிறைவில் அனைத்து மாணவர்களுக்கும் நினைவுச் சின்னங்களும், சான்றிதழ்களும் மற்றும் பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டன.

Leave a comment